தமிழகத்தில் 65.80 லட்சம் மின் இணைப்புகள் இதுவரை ஆதாருடன் இணைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் இன்று (டிச.6) வரை 65.80 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின்வாரியம் நுகர்வோரின் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தொடங்கியுள்ளது. இதற்காக, டிச.31-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 2,811 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக கவுன்ட்டர்களில் இதற்கான பணி கடந்த 28-ம் தேதி தொடங்கி நடைப்பெற்று வருகிறது. பொதுமக்கள் பலரும், தங்களது பகுதிகளில் உள்ள மின் வாரியப் பிரிவு அலுவலகங்களில் தங்களது மின் இணைப்பு எண்களை ஆதாருடன் இணைத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக இன்று மாலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், இன்று (டிச.6) 2,811 பிரிவு அலுவலக சிறப்பு முகாம்கள் மூலம் 3.01 லட்சம் இணைப்புகளும், ஆன்லைனில் 2.02 லட்சம் இணைப்புகளும் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. இன்று வரை மொத்தம் 65.80 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கின்றன" என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE