மருந்து கடைகளில் மருந்தாளுநர்கள் அடையாள அட்டையுடன் வெண்ணிற அங்கி அணிய வேண்டும்: மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழுவதும் மருந்து கடைகளில் பணிபுரியும் மருந்தாளுநர்கள் வெண்ணிற அங்கி, அடையாள அட்டை அணிய வேண்டும் என்று மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர் (பொறுப்பு) பி.வி.விஜயலட்சுமி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் சுமார் 40 ஆயிரம் சில்லறை மருந்து கடைகள், மருந்தகங்கள் உள்ளன. இவற்றில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்த மருந்தகங்களில் பணிபுரியும் மருந்தாளுநர்கள் வெண்ணிற அங்கி, அடையாள அட்டைஅணிகின்றனர்.

அதேநேரம் சில்லறை மருந்துக் கடைகள் மற்றும் சில மருந்தகங்களில் மருந்தாளுநர்கள் வெண்ணிற அங்கி மற்றும் அடையாள அட்டையை அணிவதில்லை. இந்நிலையில், அனைத்து மருந்தாளுநர்களும் வெண்ணிற அங்கி, அடையாள அட்டை அணிய வேண்டுமென மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர் (பொறுப்பு) பி.வி.விஜயலட்சுமி அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநிலத்திலுள்ள அனைத்து சில்லறை மருந்து கடைகள், மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளுடன் இணைந்த மருந்தகங்களில் பணிபுரியும் மருந்தாளுநர்கள், பணிநேரங்களில் கட்டாயம்வெண்ணிற அங்கி,் அடையாளஅட்டை அணிந்து பணிபுரிய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்