கிருஷ்ணகிரி: திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் நடைபெற்றகட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகள் வாழ்க்கை மேம்பட அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, படித்த திருநங்கைகளுக்கு அரசு மற்றும் தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை.
எனவே, அவர்களுக்கு தமிழகஅரசு குறிப்பிட்ட சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும். திருநங்கைகளுக்கான நலவாரியம் கட்டமைப்பு வசதிகளை முழுமையாக செயல்படுத்தவில்லை.
பணி நிரந்தரத்தை தடுக்க சட்டவிதிகளை மத்திய அரசு மாற்றி வருகிறது. தமிழக அரசும் ஒப்பந்தம் அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்ய அரசாணை வெளியிட்டுள்ளது. இது எதிர்காலத்தில் இளைய சமுதாயத்துக்கு சோதனைகளை உருவாக்கும்.
» உதவியின் பெயரால் மதமாற்றம் செய்வது தவறு - உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
» ஜி20 உச்சி மாநாடு குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்பு
தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சட்டப்படி ஊதியம் தர வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago