பெரியாறு அணை நீர்மட்டம் 141 அடியை நெருங்கியது

By செய்திப்பிரிவு

கூடலூர்: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம், சில வாரங்களுக்கு முன்பு 136.5 அடியாக இருந்தது. இந்நிலையில் தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்து வந்தது. கடந்த 3-ம் தேதி மாலை 140 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து, முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

நேற்று முன்தினம் விநாடிக்கு 2,167 கனஅடியாகவும், நேற்று விநாடிக்கு 1,481 கனஅடியாகவும் நீர்வரத்து இருந்தது. இதனால், அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 140.5 அடியை எட்டியது. விநாடிக்கு 511 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர் நீர்வரத்து, குறைவான நீர் வெளியேற்றம் ஆகியவற்றால் அணை நீர்மட்டம் 141 அடியை எட்டும் நிலை உள்ளது. நீர்மட்ட கால அட்டவணைப்படி (ரூல் கர்வ்) இம்மாதம் 142 அடி வரை நீரை தேக்கலாம் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீர்வளத் துறையினர் கூறுகையில், தேக்கடியில் மழை நீடிப்பதால்அணை நீர்மட்டம் 142 அடியாக உயர வாய்ப்புள்ளது என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்