15 ஆண்டுகளில் மீனாட்சியம்மன் கோயில் உண்டியல் வருமானம் ரூ.100 கோடி: ஆர்டிஐ கேள்விக்கு நிர்வாகம் தகவல்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உண்டியல் வசூல் மூலமாக கடந்த 15 ஆண்டுகளில் 100 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஆண்டு முழுவதும் 4 கோடி பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள். மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களிடமிருந்து காணிக்கை வசூல் செய்ய கோயில் வளாகத்தில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உண்டியல் ஒவ்வொரு மாதமும் இறுதி நாள் எண்ணப்படுகிறது.

கடந்த 2008ம் ஆண்டு முதல் நவம்பர் 2022ம் ஆண்டு வரை சுமார் 100 கோடியே 20 லட்சத்தி 60 ஆயிரத்து 913 ரூபாய் உண்டியல் மூலம் வருமானம் கிடைத்துள்ளது. மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துப்பாண்டி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்ட கேள்விக்கு கோயில் நிர்வாகம் இந்தத் தகவலை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்