சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், திமுக அரசை மக்கள் மன்றத்தில் தோலுரித்துக் காட்டுவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அஞ்சலி செலுத்தினார். இனைத் தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் உறுதிமொழி ஏற்றார். அதில், "தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை மக்கள் மன்றத்தில் தோலுரித்துக் காட்டுவோம்.
ஜெயலலிதா நடைமுறைப்படுத்திய திட்டங்களை முடக்க நினைக்கும் திமுகவின் செயலை தடுத்திடுவோம். தமிழகத்தின் நலன்களை பாதுகாக்கவும், உரிமைகள் மீட்டு எடுக்கவும், ஜெயலலிதாவை இதயத்தில் தாங்கிய ஜனநாயக போர் வீரர்களாக செயல்படுவோம் என்று இந்த நாளில் உறுதி ஏற்போம்" என்று டிடிவி தினகரன் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
16 secs ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago