‘எங்களை வெளியேற்ற வக்பு வாரியம் முயற்சி’ - சிதம்பரம் உதவி ஆட்சியரிடம் 300-க்கும் மேற்பட்டோர் முறையீடு

By க.ரமேஷ்

கடலூர்: சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தை பள்ளிப்படை, பூத கேணி பகுதி மக்கள் முற்றுகையிட்டு உதவி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

சிதம்பரம் அருகே உள்ள பள்ளிப்படை, பூதகேணி ஆகிய பகுதிகளில் வக்பு வாரிய இடத்தில் வசிப்பதாக தெரிவித்து 300 பேரை வெளியேற்ற நடக்கும் முயற்சியை கண்டித்து சுமார் 300-க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் இன்று (டிச.5) காலை 11 மணி அளவில் சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, உதவி ஆட்சியர் ஸ்வேதா சுமனிடம் மனு அளித்தனர்.

இது குறித்து மனு அளிக்க வந்த பொதுமக்கள் கூறுகையில்: "நாங்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதிகளில் வீடு கட்டி வாழ்ந்து வருகிறோம். வங்கிக் கடன் உள்ளிட்ட பல வகை கடன்களை வீட்டில் மீது பெற்று கட்டி வருகிறோம். இந்த நிலையில், நாங்கள் 300-க்கும் மேற்பட்டோர் குடியிருக்கும் பள்ளிப்படை மற்றும் பூதகேணி பகுதி இடங்கள் வக்பு போர்டுக்கு சொந்தமானது எனக் கூறி வக்பு போர்டு நிர்வாகம் எங்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்ற முயற்சி செய்து வருகிறது.

இடத்தை காலி செய்து விட்டு வெளியேற வேண்டும் என்று வக்பு போர்டு நிர்வாகம் கெடுபிடி செய்து வருகிறது. எங்களிடம் உள்ள பட்டா, பத்திரப் பதிவுத் துறை அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரம், மின் இணைப்பு எங்கள் பெயரில் வாங்கி உள்ள மின் இணைப்பு ரசீது ஆகியவர் ஆகிய ஆவணங்களுடன் எங்களிடம் உள்ளது. நாங்கள் குடியிருக்கும் இடம் எங்களுக்கு சொந்தமான இடம் ஆகும். இது குறித்த உரிய ஆவணங்களுடன் சிதம்பரம் உதவி ஆக்கியரிடம் மனு கொடுக்க வந்துள்ளோம்" என்று பொதுமக்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE