திருப்பூர் மாவட்டத்தில், கடந்த சில வாரங்களில் மட்டும் பொதுமக்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை தேய்க்கும், பாயின்ட் ஆப் சேல் (பிஓஎஸ்) இயந்திரங்களுக்கு, 5 ஆயிரம் பேர் வங்கியில் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையாக புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பு நீக்கம் செய்து, கடந்த நவ.8-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து, பொதுமக்கள் கையிருப்பில் வைத்திருந்த பழைய நோட்டுகளை மாற்றுவது தொடர்பாக, புதிய நோட்டுகளை பெறுவதற்காகவும், வங்கிகளில் முன் அன்றாடம் நூற்றுக்கணக்கில் படையெடுத்தனர். தற்போது, ஒரு மாதத்தை கடந்தும் நிலைமை சீரடையவில்லை.
சிரமங்களை தீர்க்கும் வகையில், ரொக்கப் பரிவர்த்தனைகளை குறைத்துக் கொண்டு, டெபிட் கார்டு (பற்று அட்டை), கிரெடிட் கார்டு (கடன் அட்டை) பயன்பாடு, அலைபேசி செயலிகள், மின் பணப்பை (இ-வாலட்) போன்ற மின்னணு பரிவர்த்தனைகளுக்கு பொதுமக்கள் மாற வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
திருப்பூர் மாநகர் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏடிஎம் இயந்திரங்கள் கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக முறையாக இயங்குவதில்லை. வங்கிகள், ஏடிஎம் மையங்களில் போதிய அளவில் பணம் இருப்பு இல்லை. இதனால் பெரும்பாலான நேரங்களில், ஏடிஎம் மையங்கள் பூட்டியே கிடக்கின்றன.
தற்போதைய நிலையில், புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் புழக்கம், மக்களின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால், கிரெடிட், டெபிட் கார்டு பயன்பாட்டை அதிகரிக்கத் தொடங்கியுள்ளனர். மருந்துக் கடைகளில் தொடங்கி, பெட்ரோல் பங்க், உணவகம், பல்பொருள் அங்காடி வரை கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை தேய்க்கும், பிஓஎஸ் இயந்திரங்கள் மூலம், பொருட்களை பெறுகிறோம் என்றனர்.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எஸ்.சுந்தரமூர்த்தி கூறியதாவது: கடந்த சில வாரங்களில் மட்டும் பிஓஎஸ் இயந்திரங்களுக்கு 5 ஆயிரம் பேர் வங்கிகளில் விண்ணப்பித்துள்ளனர். சிறு வியாபாரிகள் தொடங்கி பெரிய விற்பனை நிலையங்கள் வரை, பல்வேறு தரப்பினரும் பிஓஎஸ் இயந்திரங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர். பணம் பற்றாக்குறையை சமாளிக்க மக்களிடம் கிரெடிட், டெபிட் கார்டு பயன்பாடு அதிகரித்துள்ளதன் காரணமாகவே இந்த தேவை ஏற்பட்டுள்ளது.
இந்த இயந்திரங்கள் மும்பை, பெங்களூரூ ஆகிய இடங்களில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்கும் வங்கி வாடிக்கையாளர், வங்கியில் நடப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும். தற்போது மாவட்டத்தில் குக்கிராமங்களில் வசிப்பவர்கள் கூட பிஓஎஸ் இயந்திரங்களுக்காக விண்ணப்பித்துள்ளனர். இந்தக் கருவிகளுக்காக மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கிக்கு, வாடிக்கையாளர் செலுத்த வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் 30,000 பேர் வங்கிக் கணக்கு தொடங்க புதிதாக விண்ணப்பித்துள்ளனர். இதில் 8 ஆயிரம் பேருக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago