உதகை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் இதற்கு முன் விசாரணை செய்த தனிப்படை போலீஸார் கைப்பற்றிய 720 செல்போன் தகவல் பரிமாற்றங்களின் உண்மை தன்மை அறியும் முதற்கட்ட விசாரணை தொடங்கி உள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். வழக்கு விசாரணை ஜனவரி 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த எஸ்டேட்டில் ஜெயலலிதா வரும் போது தங்குவதற்காக சொகுசு பங்களா ஒன்று கட்டபட்டது. இந்த பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அப்போது இரவு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யபட்டார். இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் கேரளாவை சேர்ந்த சயான், வாளையாறு மனோஜ் உட்பட 11 பேர் ஈடுபட்டனர்.
முதல் குற்றவாளியான கனகராஜ் சேலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து சயான் உட்பட 10 பேர் சேர்க்கபட்டு, தற்போது அனைவரும் ஜாமினில் உள்ள நிலையில் கடந்த 5 ஆண்டு காலமாக இந்த வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது. தற்போது இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
» பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு காலமுறை ஊதியத்துடன் பணி நிலைப்பு வழங்குக: அன்புமணி வலியுறுத்தல்
» அதிமுகவுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்வதை முதல்வர் நிறுத்திக் கொள்ள வேண்டும்: இபிஎஸ்
இந்நிலையில் இந்த வழக்கு இன்று உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்காக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். மேலும் சிபிசிஐடி போலீஸார் தரப்பில் விசாரணை அதிகாரி முருகவேல் தலைமையிலான போலீஸார் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சரியான மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரும் ஆஜராகினர்.
வழக்கு விசாரணையின் போது சிபிசிஐடி போலீஸார் அமைத்த தனிப்படை பற்றியும், இதுவரை நடைபெற்ற புலன் விசாரணை பற்றியும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன் விசாரித்த தனிப்படை போலீஸார் கைப்பற்றிய 720 செல்போன் தகவல் பரிமாற்றங்களின் உண்மை தன்மை அறியும் விசாரணையில் சிபிசிஐடி போலீஸார் ஈடுப்பட்டுள்ளதாகவும், தனிப்படை போலீஸார் விசாரித்த சாட்சிகளின் ஆவணங்களையும் சிபிசிஐடி போலீஸார் ஆய்வு செய்து வருவதாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் தெரிவித்தார்.
மேலும் "மின்னணு சாட்சியங்களை ஆய்வு செய்ய இந்த துறை நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று விசாரணை நடைப்பெற்று வருகிறது. இந்த வழக்கில் தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. புலன் விசாரணைக்காகவும், செல்போன் தகவல் பரிமாற்றங்களை ஆய்வு செய்யவும் கால அவகாசம் வழங்க வேண்டும்" என்று ஷாஜகான் கூறினார். இதனிடையே, வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி முருகன் வழக்கு விசாரணையை ஜனவரி 27ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago