சென்னை: தமிழக விவசாயிகளின் உரத்தேவையை பூர்த்தி செய்ய தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகங்களில் 90 ஆயிரம் டன் யூரியா இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழக விவசாயிகளின் தேவைக்கேற்ப தரமான விதைகள், ரசாயன உரங்களை மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உரிய காலத்தில் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு விநியோகிக்க வேளாண் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நடப்பாண்டில் பெய்த சாதகமான பருவமழையைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளுக்கு காலத்தே ரசாயன உரங்களை வழங்க வேண்டும் என்ற நோக்கில், தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. அதன் அடிப்படையில் தமிழகத்துக்கு, நவம்பர் மாதத்தில் 1,01,276 டன் யூரியா,14,263 டன் டிஏபி, 15,472 டன் பொட்டாஷ், 68,248 டன் காம்ப்ளக்ஸ் என மொத்தம் 1,99,259 டன் ரசாயன உரங்கள் வந்துள்ளன.
தமிழகத்தில் நடப்பு சம்பா மற்றும் ரபி பருவத்தில் இதுவரை 36.725 லட்சம் ஏக்கர் பரப்பில் நெல், மக்காச்சோளம், சிறுதானியங்கள், பயறு வகைப் பயிர்கள், எண்ணெய்வித்துக்கள், பருத்தி போன்ற வேளாண் பயிர்களும், 6.4 லட்சம் ஏக்கரில் காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு தோட்டக்கலைப் பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகங்களில் 90 ஆயிரம் டன் யூரியா இறக்குமதி செய்யப்பட்டு, காவேரி டெல்டாஉள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு போர்க்கால அடிப்படையில் ரயில் மற்றும் லாரிகள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
அரசு எடுத்த சீரிய நடவடிக்கைகளால், தமிழகத்தில் வேளாண் துறை வரலாற்றில் சாதனை அளவாக இந்தாண்டு நவம்பரில் அதிகபட்சமாக 1,18,778 டன் யூரியா விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த நவ.30-ம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் 81,913 டன் யூரியா,33,629 டன் டிஏபி, 32,296 டன் பொட்டாஷ், 1,59,049 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பில் உள்ளன. மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதால், உரங்களை வாங்கி விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். உர பதுக்கலைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago