சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாக அண்ணாமலை தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து அறிக்கை அளிக்கும்படி, தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்பட்டது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங் கேற்று, போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்நிலையில், சமீபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், பிரதமர் மோடி சென்னை வந்தபோது பாதுகாப்பு சோதனைக்காக வெடிகுண்டு சோதனை கருவிகள் பயன்படுத்தப்பட்டன. அவை சரியாக வேலை செய்யவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். இதை மறுத்த டிஜிபி சைலேந்திர பாபு, ‘பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு எதுவும் இல்லை. பிரதமரின்பாதுகாப்பு பிரிவினரும் எந்த குறையும் தெரிவிக்கவில்லை’ என்று தெரிவித்தார்.
இந்நிலையில், அண்ணாமலையின் குற்றச்சாட்டு தொடர்பாக தலைமைச் செயலர் இறையன்புவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவிகடிதம் எழுதியுள்ளார். அதில், அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையின் அடிப்படையில், மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை அளிப்பார் என கூறப்படுகிறது.
» மெட்ரோ ரயிலில் பயணிக்க வாட்ஸ் - அப் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி: விரைவில் அறிமுகம் செய்ய திட்டம்
இதனிடையே, தமிழக பாஜகதரப்பில், இந்த புகாரை மத்தியஅரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லவும், அதன் அடிப்படையில் விசாரணை நடத்தும்படி கோரவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அண்ணாமலையின் குற்றச்சாட்டு தொடர் பாக தலைமைச் செயலருக்குஆளுநர் கடிதம் எழுதியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
34 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago