வார்தா புயல் காரணமாக ஆயிரக்கணக்கான மரங்கள் அழிந்து, பசுமை பரப்பு குறைந்துள்ளதால், கோடையின்போது 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுற்றுச் சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களைச் சமீபத்தில் சூறையாடிய வார்தா புயல், ஒரு லட்சம் மரங்களுக்கு மேல் அழித்துவிட்டது. சென்னை யில் மட்டும், விழுந்த பெரிய அளவிலான, 50 ஆண்டுகள் பழமையான மரங்கள் 30 ஆயி ரத்தைத் தாண்டும் என்கின்றனர் தாவரவியல் ஆய்வாளர்கள். பசுமைப் போர்வையை இழந் துள்ள சென்னை, புறநகர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட் டங்களில் அடுத்தடுத்த நிகழ்வுகள் எப்படியிருக்கும் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். அப்போது தான் பாதிப்புகளை எதிர்கொள்ள முடியும்.
வெப்பம் அதிகரிக்கும்
மரங்களின் அளவு குறைவதால், காற்றில் ஈரப்பதம் குறைந்து, நீர்நிலைகளில் உள்ள நீரும் விரைவாக ஆவியாகிவிடும். இத னால், வெப்பநிலை அதிகரிக்கும் என சூழலியலாளர்கள் கருதுகின் றனர். இது தொடர்பாக, சுற்றுச் சூழலியலாளர் நக்கீரன் கூறும் போது, "காற்றில் உள்ள ஈரப் பதத்தை நிலைப்படுத்துபவை மரங்கள்தான். மரங்கள் இல்லா விட்டால் காற்றில் வெப்பம் அதி கரிக்கும்.
சூடான காற்று மேலெழும்பி வீசும்போது, மீதமுள்ள மரங்கள் சேமித்துள்ள ஈரத்தையும் கவரும். நீர்நிலைகள் துரிதமாக ஆவியாகும். பசுமை பரப்பு குறைவதால் சாதாரணமாக 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும். மரங்களற்ற சாலை களில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும். புறநகரை விட நகரங்களில் வெப்பநிலை அதிகமாகும்” என்றார்.
ஒளி, ஒலி அளவு உயரும்
பொதுவாக கான்கிரீட் கட்டி டங்கள் அதிகம் உள்ள நகரங் களை, வெப்பத்தீவு என சூழலிய லாளர்கள் வர்ணிக்கின்றனர். அந்த அளவுக்கு கான்கிரீட் கட்டிடங்கள் வெப்பத்தை உள்வாங்கி, அதன் பின் வெளிப்படுத்துகின்றன.
இதுதவிர, கட்டிடங்களும், தார்ச்சாலையும் ஒளியைப் பிரதி பலிக்கும் தன்மை கொண்டவை என்பதால், ஒளியின் பாதிப்பு அதிகரிக்கும்.
இதுகுறித்து நக்கீரன் கூறும் போது, "பொதுவாக மரங் கள் அடர்ந்துள்ள பகுதிகளில் வெயிலால் கண் கூசாது. மரங்களே இல்லாத பகுதியில் வெளிச்சம் அதிகரித்து கண்கள் கூசும். மரங்கள் உள்ள பகுதிகளில் 10 சதவீதத்துக்கு கீழ்தான் பிரதிபலிப்பு இருக்கும். ஆனால், கட்டிடங்கள் 60 சதவீதம் பிரதிபலிப்பதால் பாதிப்புகள் இருக்கும். அதே போல், காற்றில் பரவும் ஒலியை பொறுத்தவரை, பகலில் 90 டெசிபல், இரவு 80 டெசிபல் அளவு இருக்கும். சாலையில் 50 அடிக்கு மரங்கள் தொடர்ந்து இருந்தால். அந்த மரங்கள் காற்றில் பரவும் சப்தத்தை 20-30 டெசிபல் அளவுக்கு குறைத்துவிடும்" என்றார்.
அதிகரிக்கும் காற்று மாசு
காற்று மண்டலத்தில் வாகனங் கள் வெளியிடும் கார்பன் மோனாக் சைடு மற்றும் சிறு துகள்களின் அளவு அதிகரிக்கும்போது சுவா சக்கோளாறுகள் ஏற்படும். இந்த பாதிப்புகளை இயற்கையாகவே மரங்கள் குறைத்து வந்தன. தற்போது மரங்கள் குறைவதால் மாசு அதிகரிக்கும்.
இதுபற்றி நக்கீரன் மேலும் கூறும்போது, "காற்று மண்டலத்தில் உள்ள தூசியை மரங்கள் 70 சதவீதம் ஏற்றுக் கொள்ளும். அந்த தூசியை மழை வரும் போது, மீண்டும் தரைக்கு கொண்டு சேர்த்துவிடும். மரங்கள் இல்லாவிட்டால், 70 சதவீதம் தூசியும் பாதிப்பை ஏற்படுத்தும். கார்பன் அளவு அதிகரிக்கும். இந்த பாதிப்புகளை அடுத்த கோடைக்காலத்தில் உணர முடியும்" என்றார்.
கவனம் தேவை
ஏற்கெனவே பருவகால மாற்றம் சுற்றுச்சூழலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகி றது. இந்நிலையில், ஒவ்வொரு பகுதியையும் சார்ந்த நுண் பருவநிலையில் நாம் கவனம் வைக்க வேண்டும் என்கிறார் நக்கீரன்.
இது தொடர்பாக அவர் கூறும் போது, "மரங்கள் அதிகமுள்ள, மழையை கவரும் பகுதியை நுண் பருவநிலை கொண்ட பகுதி எனலாம். சிறு குன்றுகள் இருந்தால் கூட மழை அதிகரிக்கும்.
இந்தவகையில் சென்னையில் கிண்டி நுண் பருவநிலை கொண்ட பகுதியாகும். இது போன்ற பகுதிகளில் பசுமைப் பரப்பை மீண்டும் கொண்டுவர வேண்டும்.
அதற்காக எளிதில் விழும் மரங்களை நடக்கூடாது. ஆணிவேர் கொண்ட மரங்களை அதிகளவு வளர்க்க வேண்டும். விதைகளை நேரடியாக ஊன்றினால்தான் ஆணிவேர் பலமான மரங்கள் கிடைக்கும். வளர்த்து நடப்படும் மரங்கள் இந்த அளவுக்கு உறுதி யாக இருக்காது. குறிப்பாக நமக்கே உரிய இயல்வகை மரங் களை அதிகளவில் நடவேண்டும். எவ்வளவு இழந்துள்ளோமோ அதைவிட அதிகமாக பசுமைப் பரப்பை அதிகரிக்க வேண்டும்" என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago