புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி இன்று காலை நடைபயிற்சியின் போது மயங்கி விழுந்து உயிரிழந்தது. அதற்கு வயது 32. யானையின் மறைவால் புதுச்சேரி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், யானை மறைவுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "நம் புதுவையில் அருள்மிகு மணக்குள விநாயகரை தொழ வருபவர்களின் தோழியான லட்சுமி யானை இன்று இல்லை என்று நினைத்து வருந்துகிறேன். மணக்குள விநாயகர் திருக்கோவிலுக்கு வருபவர்களிடம் தோழியாக, சகோதரியாக ஆசிர்வாதம் செய்தது இன்னும் மனக்கண்ணில் நிழலாடுகிறது. மணக்குள விநாயகர் தேர் வரும்போது தேர் போன்றே கம்பீரமாக அந்த பிரகாரத்தில் தேரை வழிநடத்தி செல்வாள். எங்களை எப்படி தேற்றிக் கொள்வதே என்று தெரியவில்லை. லட்சுமி யானையை இழந்து வாடும் புதுவை மக்களுக்கும்,வெளியூரிலிருந்து வந்து அன்போடு அவளிடம் பழகிய அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். யானை லட்சுமியின் உடலுக்கு அவர் நேரில் வந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
ஐந்து வயதில் வந்த லட்சுமி.. புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலுக்கு கடந்த 1996ம் ஆண்டு ஐந்து வயதில் லட்சுமி யானை வந்தது. புதுச்சேரியில் உள்ள பக்தர்களுக்கு மிகவும் நெருக்கமான யானையாக லட்சுமி திகழ்ந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மணக்குள விநாயகர் கோயிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் யானை லட்சுமியை தரிசிக்காமல் சென்றதில்லை.
தமிழகத்தில் கோயில் யானைகளுக்கு ஆண்டுதோறும். 48 நாட்கள் புத்துணர்வு முகாம் நடத்தப்படுவது வழக்கம். கரோனா காலத்தில் கோயில் யானைகளுக்கான இந்த புத்துணர்வு முகாம் நிறுத்தப்பட்டது. இந்த முகாமில் ஆண்டுதோறும் புதுவை மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமியும் பங்கேற்று திரும்பும். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக புத்துணர்வு முகாம் இல்லாததால் இந்த ஆண்டு கோயில் நிர்வாகம், வனத்துறை அறிவுறுத்தல்படி லட்சுமிக்கு அது தங்கியுள்ள வேதபுரீஸ்வரர் கோயில் வளாகத்தில் இருக்கும் கொட்டிலில் 15 நாட்கள் ஓய்வெடுக்க அனுமதித்தது.
» மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு ஜைக்கா நிறுவனம் இதுவரை நிதி விடுவிக்கவில்லை: ஆர்டிஐ பதிலில் தகவல்
நீரிழிவு பாதிப்பு: யானை லட்சுமி நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தது. அதனால் அடிக்கடி அதற்கு காலில் புண்ணும் ஏற்படும். ஓய்வு காலத்தில் யானை லட்சுமி கோயிலுக்கு வரவில்லை. பார்வையாளர்கள் பார்க்கவும் வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் யானையின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பழ வகைகளை தவிர்த்து களி, பனை, தென்னை மட்டை, அரசமர இலை மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் வழங்கப்பட்டது. தமிழக வனத் துறை மருத்துவர்கள் பரிசோதித்த பின், யானை லட்சுமி கோயிலுக்கு திரும்பும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று காலை லட்சுமியின் இருப்பிடமான ஈஸ்வரன் கோயில் இருப்பிடத்தில் இருந்து நடை பயணம் சென்றது. அப்போது கல்வே கல்லூரி அருகே சென்றபோது மயங்கி விழுந்தது சிறிது நேரத்தில் அங்கேயே உயிரிழந்தது. யானை லட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago