வங்கிகளில் கடனுதவி பெற உதவும் புதிய இணையதள நிதி சேவை: தேசிய சிறுதொழில் கழகம் அறிமுகம்

By ப.முரளிதரன்

குறு, சிறு தொழில்முனைவோர்கள் தாங்கள் தொழில் தொடங்க வங்கிகளில் கடனுதவி பெற உதவுவதற்காக புதிய இணையதள நிதி சேவையை தேசிய சிறுதொழில் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தேசிய சிறுதொழில் கழகம் இந்திய அரசின் மினி ரத்னா நிறுவனமாகும். 1955-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங் களின் வளர்ச்சிக்கும் அவற்றைத் தொடங்குவதற்கும் தேவையான உதவிகளை அளித்து வருகிறது. இந்நிலையில், சிறு, குறு தொழில் முனைவோர்கள் தாங்கள் தொழில் தொடங்க வங்கிகளில் கடனுதவி பெற உதவுவதற்காக புதிய இணை யதள நிதி சேவையை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, சென்னையில் உள்ள தேசிய சிறுதொழில் கழகத் தின் துணை பொது மேலாளர் ஆர்.சரவணகுமார் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

புதிதாக தொழில் தொடங்க விரும்பும் சிறு, குறு தொழில் முனைவோர்களுக்கு அவர்கள் தொழில் தொடங்குவதற்கான பதிவு செய்தல், உற்பத்தி செய்வதற்கான இயந்திரங்களை வாங்குதல், மூலப் பொருட்களை வாங்குதல் ஆகியவற்றுக்கு தேசிய சிறுதொழில் கழகம் உதவி செய்து வருகிறது. அத்துடன், அவர்களுக்கு வியாபார வாய்ப்பு வழங்கும் வகையில் தொழில் கண்காட்சிகளில் அவர்கள் அரங்கம் (ஸ்டால்) அமைப்பதற்காக 70 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

அதேபோல், இந்நிறுவனங்கள் தொழில்கடன் பெற வங்கிகளுக்கு விண்ணப்பிக்கும் போது அந்நிறுவனங்களின் தரம் குறித்து வங்கிகள் கேட்கின்றன. அதற்காக அந்நிறுவனங்களை கிரிசல், பிட்ச் போன்ற தர நிர்ணயம் செய்யும் நிறுவனங்கள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும். இவ்வாறு தரச்சான்றிதழ் கோரி குறு, சிறு நிறுவனங்கள் விண்ணப்பிக்கும் போது அதற்கு ஆகும் செலவில் 75 சதவீதம் மானியம் வழங்கப்படு கிறது. மேலும், பெரிய நிறுவனங் கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை தயாரித்து தரக்கோரி டெண்டர் விடும் சமயத்தில் ஒரு குறு, சிறு நிறுவனத்தால் அவர்கள் கேட்கும் அளவுக்கு பொருட்களை உற்பத்தி செய்து தர இயலாது. அந்த நிலையில், 3 அல்லது 4 குறு, சிறு நிறுவனங்கள் சேர்ந்து தயாரித்து வழங்கும்.

அந்த சமயத்தில் அந்த நிறுவனங் களின் சார்பில் தேசிய சிறுதொழில் கழகம் டெண்டரில் பங்கேற்று ஆர்டர் எடுத்து இந்த நிறுவனங்களுக்கு பகிர்ந்து அளிக்கும். இத்தகைய சேவைகளை அளித்து வரும் இக் கழகம் மற்றொரு புதிய சேவையாக சிறு, குறு தொழில்முனைவோர்கள் தாங்கள் தொழில் தொடங்க வங்கி களில் கடனுதவி பெற உதவுவதற் காக புதிய இணையதள நிதி சேவை யை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, புதிதாக தொழில் தொடங்க விரும்பும் தொழில்முனை வோர்கள் வங்கிகளில் சென்று கடன் கேட்டால் சில நேரங்களில் அவர்களுக்கு கடன் நிராகரிக்கப்படு கிறது. அவர்கள் சமர்ப்பிக்கும் ஆவ ணங்கள் மற்றும் திட்ட அறிக்கை (புராஜெக்ட் ரிப்போர்ட்) ஆகி யவை சரியாக இல்லாததே இதற்குக் காரணம். அவர்கள் எங்கள் அலுவல கம் வாயிலாக விண்ணப்பித்தால் அவர்களுடைய ஆவணங்களை சரிபார்த்து விண்ணப்பிக்க உதவு வோம். இதைத்தவிர பல்வேறு சேவைகளையும் வழங்கி வருகிறோம். இதுதொடர்பாக கூடு தல் விவரங்களுக்கு 044-28293347/ 4541/4146 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். இவ்வாறு சரவணக்குமார் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்