சென்னையில் தூவ 30,000 நாட்டுமர விதைப் பந்துகள் தயார்: இளைஞர்களை அழைக்கிறது தாம்பரம் மக்கள் குழு

By டி.எல்.சஞ்சீவி குமார்

‘வார்தா’ புயலால் சுமார் 30 ஆயிரம் பெரிய மரங் களை சென்னை இழந் திருக்கும் நிலையில் இங்குள்ள தரிசு நிலங்களிலும் காப்புக் காடுகளிலும் விதைப் பந்துகளை தூவ திட்டமிட்டுள்ளது தாம்பரம் மக்கள் குழு. என்றாவது ஒருநாள் உதவும் என்று கடந்த சில ஆண்டுகளாக அந்தக் குழுவினர் பல்வேறு நாட்டு மரங்களின் விதைகளை முன்னெச்சரிக்கையாக சேகரித்து சுமார் 30 ஆயிரம் விதைப் பந்துகளை உருவாக்கியிருக்கிறார்கள்.

நீர் நிலைகளை பராமரிப்பது, இயற்கை விவசாயத்துக்கு ஆதர வாக குரல் கொடுப்பது, மரபணு மாற்றுப் பயிர்களுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட களங்களில் செயல்பட்டு வருகிறது தாம்பரம் மக்கள் குழு. மென்பொருள் துறை உட்பட பல்வேறு துறைகளில் பணிபுரியும் இளைஞர்களை உள்ளடக்கிய குழு இது. இவர்கள்தான் வரும் ஞாயிறு அன்று சென்னையின் தரிசு நிலங்கள், புறநகரின் காப்புக்காடுகள் ஆகிய பகுதிகளில் விதைப் பந்துகளை தூவ திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து தாம்பரம் மக்கள் குழுவின் உறுப்பினரான ஜனகன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

கடந்த இரு ஆண்டுகளாகவே நமது பாரம்பரிய நாட்டு மரங் களான சரக்கொன்றை, மகிழம், குன்றிமணி, புங்கன், பூவரசு, பூனைத்தாளி, புளியம், கல்யாண முருங்கை உள்ளிட்ட மரங்களின் விதைகளை சேகரித்து விதைப் பந்து தயாரிக்கிறோம்.

இப்போது மொத்தம் 15 சாக்குப் பைகளில் சுமார் 30 ஆயிரம் விதைப் பந்துகள் இருக்கின்றன. 5 பங்கு மண், 3 பங்கு காய்ந்த எரு, ஒரு பங்கு துளசி, கிர்ணிபழம், திருநீற்றுப்பச்சை, தும்பை, குதிரை வாலி, தினை, கம்பு, சாமை ஆகியவற்றின் விதைகள் இவற்றை லேசாக தண்ணீர் தெளித்து சப் பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ள வேண்டும். இதன் நடுவே கருவைப்போல ஒரு மரத்தின் விதையை வைத்து உருண்டை பிடித்துக்கொள்ள வேண்டும். இந்த உருண்டைகளை முதலில் ஒருநாள் நிழலில் உலர்த்த வேண்டும். அப்போதுதான் விரிசல் விழாமல் இருக்கும். பின்பு சுமார் 3 நாட்கள் வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதனுள் இருக்கும் விதைகள் எத் தனை ஆண்டுகளானாலும் உயிர்ப் புடன் இருக்கும். அழிந்து வரும் பாரம்பரிய பயிர்கள், மரங்களை பாதுகாக்க இதுபோன்று செய்ய லாம். ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பழங்குடிகள் பயன்படுத் தும் உத்தி இது. நேரடியாக விதைகளை எடுத்து வைத்தாலோ தூவினாலோ அவை பூஞ்சாணம் பிடிக்கவும், எறும்புகள், வண்டுகள், பறவைகள் சாப்பிட்டுவிடவும் வாய்ப்பு உண்டு.

இந்த விதைப் பந்துகளை மழைக் காலத்துக்கு முன்பாக தரிசு நிலங் களிலும் காடுகளிலும் போட்டுவிட வேண்டும். மழை பொழியும்போது இவை மண்ணோடு மண்ணாக கரைந்து செடிகளும் மரங்களும் இயல்பாக முளைக்கும். பொதுவாக ஒரு தாவரம் விதையாக தூவப்பட்டு இயல்பாக முளைப்பதுதான் ஆரோக்கியமானது. அப்போது தான் மண்ணில் விதையின் ஆணி வேர் செங்குத்தாக ஊடுருவிச் செல்லும். இந்த வகையில் ஒரு மரம் எவ்வளவு உயரமாக பூமியின் மேற்பரப்பில் வளர்கிறதோ அவ்வளவு உயரத்துக்கு பூமிக்கு கீழே ஆணி வேர் ஊடுருவும். ஆனால், சிறு பிளாஸ்டிக் பைகளில் உற்பத்தி செய்யப்படும் மரக்கன்று களின் வேர்கள் நேராக அல்லாமல் வளைவாகவும் சுருண்டும் இருக் கும். அந்தக் கன்றுகளை மண்ணில் நட்டால் அவற்றின் வேர்கள் பூமியை ஆழமாக ஊடுருவிச் செல் லாமல் பக்கவாட்டிலேயே செல்லும். இதனாலேயே தெருக்களிலும் வீடு களிலும் நடப்படும் மரங்கள் புயலில் விழுந்துவிடுகின்றன. அதேசமயம் காடுகளில் இயற்கையான விதைப் பரவல் மூலம் வளரும் மரங்கள் உறுதியாக இருக்கின்றன.

மேலும் ஒரு விதை இயல்பாக மண்ணில் விழுந்து வளரும்போது தான் அந்தத் தாவரம் இடம், கிடைக்கும் தண்ணீர், வெயில், நிழலின் அளவுக்கு ஏற்ப தன்னைத் தானே தகவமைத்துக்கொண்டு வளரும். தண்ணீர் குறைந்த அளவு கிடைத்தாலும் கல்சுவர்களில் ஆலமரம் வேர் பிடித்து வளர்வதும், கரைபுரண்டு ஓடும் ஆற்றின் கரையோரத்திலும் கூட நாவல் மரங்கள் தழைத்திருப்பதும் இதற்கு உதாரணங்கள். வீட்டில் வளர்க்கும் செடிகளுக்கு ஒரு வாரம் தண்ணீர் ஊற்றவில்லை என்றால் காய்ந்துவிடும். ஆனால், அதே வீட்டில் அருகில் புதரில் வளரும் செடிகள் மாதக்கணக்கில் தண்ணீர் இல்லாத நிலையிலும் செழித்து வளர்ந்திருக்கும். இதன் அடிப்படை அறிவியலும் இதுதான்.

கடந்த இரு ஆண்டுகளாகவே தாம்பரம், வண்டலூர், நன்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு பள்ளிகளுக்குச் சென்று விதைப் பந்துகள் உருவாக்குவது குறித்து மாணவர்களுக்குப் பயிற்சி அளித் துள்ளோம். தற்போது சேகரித்து, தயார் நிலையில் வைத்துள்ள விதைப் பந்துகளை தாம்பரம், வண்ட லூர், பல்லாவரம், திரிசூலம் உட்பட சென்னையின் புறநகரிலிருக்கும் காப்புக்காடுகளில் தூவ இருக்கிறோம். வரும் ஞாயிறு அன்று நடக்கவிருக்கும் இந்த நிகழ்வில் பங்கேற்க இளைஞர்கள் முன்வர வேண்டும். அன்றைய தினம் விதைப் பந்து உருவாக்குவது குறித்த பயிற்சியும் அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்