சென்னை: தமிழக காவல்துறை சட்டம் -ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். தமிழக காவல் துறையில் முக்கிய பொறுப்புகளில் ஒன்று சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி பதவி.மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்பிக்கள், மண்டல ஐஜி களுடன் நேரடியாக தொடர்புகொண்டு அங்குள்ள சட்டம் ஒழுங்கு உள்பட பல்வேறு முக்கிய தகவல்களை நேரடியாக கேட்டு அதை சட்டம் - ஒழுங்கு டிஜிபிக்கு வழங்குவார். அதுவே இறுதி செய்யப்பட்டு தினமும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
போலீஸாரின் பணி இட மாற்றம், பதவி உயர்வுக்குகூட இவரின்அனுமதி முக்கியம். அத்தகைய முக்கிய பொறுப்பில் கடந்தாண்டுமே மாதம் முதல் தாமரைக்கண்ணன் இருந்து வருகிறார். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் சட்டம் - ஒழுங்கு, உளவு பிரிவு, நுண்ணறிவு பிரிவு, சிபிசிஐடி உள்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளை ஏற்கெனவே திறம்பட கவனித்துள்ளார்.
2012-ல் தென் சென்னை கூடுதல்காவல் ஆணையராக தாமரைக்கண்ணன் இருந்தபோது அவரது காவல் எல்லைக்கு உட்பட்ட வேளச்சேரியில் வட மாநிலத்தைச் சேர்ந்த வங்கி கொள்ளையர்கள் 5 பேர் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்டங்களில் அவ்வப்போது ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு நேரில் சென்றும் தீர்வுகண்டுள்ளார். திமுக,அதிமுக என இரு கட்சிகளின் ஆட்சியின்போதும் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். இந்நிலையில், அவர் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago