தேர்தலில் போட்டியிடாமலேயே ஜனவரி 15-லிருந்து 31-ம் தேதிக்குள் வி.கே.சசிகலா தமிழக முதல்வராக பொறுப்பேற்க இருப்பதாக அதிமுக-வின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெருத்த எதிர்பார்ப்புக்கு இடை யில் அதிமுக பொதுக்குழு டிசம்பர் 29-ல் சென்னையில் கூடுகிறது. இந்தப் பொதுக்குழுவில் சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகி விட்டது. இதனால், பொதுக் குழுவை சிறு சலசலப்புகூட இல் லாமல் வெற்றிகரமாக நடத்திமுடிப் பதற்கான அனைத்து வேலைகளும் சசிகலா தரப்பிலிருந்து கவனமாக செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவ ருக்கு ஜோதிடம் கணித்துக் கொடுத்த ஜோதிடர் குழுவின் ஆலோசனைப்படி அரசியலின் அடுத்தடுத்த நகர்வுகளுக்கும் சசிகலா தயாராகி வருகிறார். இதுகுறித்து அதிமுகவின் நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து நம்மிடம் பேசியவர்கள் ‘‘29-ம் தேதி கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படும் சசிகலா, புத்தாண்டில் முறைப்படி பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறார். அநேகமாக ஜனவரி முதல் வாரத்தில் எளிய முறை யில் அவர் கட்சியின் பொதுச்செய லாளராக பதவி ஏற்றுக்கொள்வார்.
இதையடுத்து, தை பிறந்ததும் சசிகலா தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்வதற்கான வேலைகள் முடுக்கிவிடப்படும். இதற்கேற்ற வகையில் அமைச்சர் கள், கட்சியின் நிர்வாகிகள் சசிகலா முதல்வர் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என வெளிப்படையாக கோரிக்கை வைப்பார்கள். அதை ஏற்று, தை மாதத்தில் சசிகலா தமிழக முதல்வராக பொறுப்பேற்பார். அநேகமாக ஜனவரி 15-லிருந்து 31-ம் தேதிக்குள் அவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்பார்.
தற்போது ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருப்பதால் அந்தத் தொகுதியில் சசிகலா போட்டியிடுவார் என்று பரவலான தகவல் உள்ளது. ஆனால், சென்னையில் போட்டியிடுவதை விட தென் தமிழகத்தில் போட்டி யிடுவதுதான் பாதுகாப்பாக இருக்கும் என்று உளவுத் துறை தகவல் தந்துள்ளது. இதனால், ஆர்.கே.நகர் தொகுதியை இரண்டாவது தேர்வாக வைத்திருக்கிறார் சசிகலா. அதற்கு பதிலாக ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, மதுரை மேற்கு இந்த மூன்று தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் சசிகலாவை நிறுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் பிரமலைக் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த எட்டுப் பேருக்கு சீட் கொடுக்கப்பட்டது. இதில் பெரும் பாலானவர்கள் சசிகலாவின் சிபாரிசு. இதில் இரண்டு பேர் தற்போது அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள். இதனால் பிரமலைக் கள்ளர் சமூகத்தினர் சசிகலாவுக்கு ஆதரவாக இருக் கிறார்கள். அவருக்காக பரிசீலனை யில் உள்ள இந்த மூன்று தொகுதி களிலும் கணிசமாக இருப்பது இந்த சமூகம்தான். எனவே, இதில் ஏதாவதொரு தொகுதியில் சசிகலா போட்டியிடுவதற்கு ஆலோசனை தரப்பட்டுள்ளது’’ என்றனர்.
“சசிகலா தலைமைப் பொறுப் புக்கு வருவது பெண்கள் மத்தி யில் கடும் விமர்சனத்துக்கு உள் ளாகி இருக்கிறது. இந்த எதிர்ப்பை வீழ்த்தி, பெண்களின் நன்மதிப்பை பெறுவதற்காக, முதல்வர் பொறுப்பு ஏற்றுக் கொண்டதுமே மதுவிலக்கை அமல்படுத்தும் முக்கியக் கோப்பில் சசிகலா கையெழுத்திடுவார்’’ என்ற தகவலையும் அவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago