ரூ.786 கோடி நஷ்டம்... வருவாய் ஈட்டாத அம்மா உணவகங்களை மூட கோரிக்கை - மேயர் பிரியா நிராகரிப்பு

By கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் ரூ.786 கோடி நஷ்டத்தில் இயங்கி வருவதால், வருவாய் மிகக் குறைவாக உள்ள அம்மா உணவகங்ளை மூடவேண்டும் என்று சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் கணக்குக் குழு தலைவர் தனசேகரன் வேண்டுகோள் வைத்தார். ஆனால், அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என மேயர் பிரியா தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சியில் 400-க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. பல உணவகங்களில் இருந்து மிகவும் குறைவான அளவு வருவாய் மட்டுமே கிடைக்கிறது. இந்நிலையில், இன்று (நவ.29) நடைபெற்ற மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் பேசிய கணக்குக் குழுத் தலைவர் தனசேகரன், "சென்னையில் அம்மா உணவகங்கள் 786 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. பல அம்மா உணவகங்கள் தினசரி 500 ரூபாய்க்கு கீழ் வருமானம் வரும் நிலையில் உள்ளது. மக்களிடம் வரவேற்பு இல்லாத பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களை மட்டும் மூட வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த மேயர் பிரியா, "அம்மா உணவகம் தொடங்கியதில் இருந்து எப்படி செயல்பட்டு வருகிறதோ அதுபோன்று அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும். பொதுமக்களிடம் வரவேறபு இல்லாத அம்மா உணவகங்கள் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கணக்கு குழுத் தலைவர் தனசேகரன், "வருமானம் குறைவாக உள்ள இடங்களில் அம்மா உணவகங்களை குறைப்பதற்கு கோரிக்கை வைத்திருக்கிறோம். அம்மா உணவகங்களை மூடும் எண்ணம் எங்களுக்கு இல்லை" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்