சென்னை: வாரணாசியில் நடைபெற்று வரும்காசி தமிழ்ச் சங்கமம் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
வாரணாசியில் கடந்த 17-ம் தேதி முதல் காசி தமிழ்ச் சங்கமம் விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவை கடந்த 19-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி முறைப்படி தொடங்கிவைத்தார். ஒரு மாதம் நடைபெறும் விழாவில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் நமது கலாச்சாரம். அந்த கலாச்சாரத்தை பேணிக் காப்பதுதான் நமது கடமை. இந்த கடமையை முன்னிறுத்தி பிரதமர் மோடி, காசி தமிழ்ச் சங்கமத்தை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளார்.
மக்களின் சங்கமம்: ராமேசுவரம் - காசி இடையேயான தொடர்பை புதுப்பிப்பதோடுமட்டுமல்லாமல், நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக் தொடரும்இந்த உறவை மெருகேற்றி,ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எடுத்துக்காட்டாக இந்த நிகழ்வு காசியில் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் 4 திசைகளில் உள்ள மக்களின் சங்கமத்துக்கான விழாவாக இது நடைபெறுவது வாழ்த்துக்குரியது, பாராட்டுக்குரியது. இந்த விழாவுக்காக தமிழ் மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago