ராஜபாளையம் ராணுவ வீரருக்கு மிரட்டல்: குடும்பத்துக்கு பாஜகவினர் நேரில் ஆதரவு

By செய்திப்பிரிவு

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே கீழராஜ குலராமன் பகுதியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவர் மேகாலயாவில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் சென்னையில் நடந்த ஒரு விழாவில், தமிழ்நாட்டை தனி நாடாக அமைப்பதே தமிழ் தேசியத்தின் இலக்கு என திருமாவளவன் பேசி உள்ளார். இதைக் கண்டித்து ராணுவ வீரர் குருமூர்த்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதையடுத்து விசிக நிர்வாகி ஒருவர் மொபைல் போனில் குருமூர்த்தியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான ஆடியோவை குருமூர்த்தி சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

இதையடுத்து ராணுவ வீரர் குருமூர்த்தியை பாஜக தலைவர் அண்ணாமலை மொபைல்போனில் தொடர்பு கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார். மேலும் அவரது குடும்பத்துக்கு தமிழக பாஜக துணை நிற்கும் என தெரிவித்தார்.

இதற்கிடையே, ராணுவ வீரர் குருமூர்த்தியின் வீட்டுக்கு நேற்று இரவு விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் வி.கே.சுரேஷ்குமார், இளைஞரணி செயலாளர் ஜெய்கணேஷ் தலைமையில் துணை தலைவர் ராஜா, பொதுச் செயலாளர் கிரி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஊர்வலமாகச் சென்று அவரது குடும்பத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்