வரலாற்றை அறிந்துகொள்ள வழிகாட்டும் அருங்காட்சியகம்: கோவை மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி

By ஆர்.கிருஷ்ணகுமார்

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவையில் கடந்த 1990-ம் ஆண்டு அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது. முதலில் வாடகைக் கட்டிடத்தில் செயல்பட்ட அருங்காட்சியகம் பல்வேறு இடமாறுதல்களுக்குப் பின்னர் 2009-ல் கோவை நகரின் மையப் பகுதியில் உள்ள வ.உ.சி. உயிரியல் பூங்கா எதிரேயுள்ள கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது.

இங்கு பல்வேறு பிரிவுகளில் 500-க்கும் மேற்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் கிடைத்த சிற்பங்கள், 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நந்தி, 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சப்த கன்னியர்கள் சிலை உள்ளிட்டவை நமது தொன்மையைப் பறைசாற்றுகின்றன.

தேர் சிற்பங்கள்

அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலின் 18-ம் நூற்றாண்டு தேர் எரிந்துவிட்டது. இந்த தேரில் இருந்த சிற்பங்கள் இங்கு காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. இதேபோல, நாணயங்கள், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த கல் ஆயுதங்கள், பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய ஈமத்தாழிகள், பதப்படுத்தப்பட்ட பறவைகள், அழியும் தருவாயில் உள்ள பிணம்தின்னிக் கழுகு, பழங்குடிகளின் வாழ்வியல் பொருட்கள் ஆகியவையும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. குகைகளில் வாழ்ந்த மனிதர்கள் ஓவியம் வரையப் பயன்படுத்திய மஞ்சள் ஆக்கர், சிவப்பு ஆக்கர் உள்ளிட்டவற்றையும் காட்சிப்படுத்தியுள்ளோம்.

இதேபோல, காங்கயம் காளையின் எலும்பு, புவியியல் சார்ந்த கனிமப் பொருட்கள், நவீனகால ஓவியங்கள், இசைக் கருவிகள் உள்ளிட்டவையும் பார்வையாளர்களைக் கவர்கின்றன.

அரசு அருங்காட்சியகத்துக்கு பெரியவர்களுக்கு ரூ.5-ம், சிறியவர்களுக்கு ரூ.3-ம் கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், பள்ளிகள் மூலம் வரும் மாணவ, மாணவிகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. இங்கு வார விடுமுறை நாட்களில் 150 முதல் 200 பேர் வரை வருகின்றனர். எனினும், மற்ற நாட்களில் குறைந்த அளவு மக்களே வருகின்றனர்.

அருங்காட்சியகத்துக்கு எதிரே உள்ள வ.உ.சி. உயிரியல் பூங்காவுக்கு ஆயிரக்கணக் கானோர் வந்தபோதிலும், அருங்காட்சி யகத்துக்கு வருவோரின் எண்ணிக்கை குறைவுதான்.

மாணவர்களுக்கு பயிற்சி

இதுகுறித்து கோவை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சி.சிவக்குமார் ‘தி இந்து’விடம் கூறியதாவது: நமது மூதாதையரின் வரலாறு, பழமையான கலாச்சாரம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்வது, எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் அவசியமாகும். மேலும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குச் செல்லவும் இது ஊக்குவிக்கும். எனவே, பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று, அருங்காட்சியகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். இதேபோல, அருங்காட்சியக வளாகத்தில் சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், பயிற்சி முகாம்கள் நடத்தவும் முடிவு செய்துள்ளோம். தொன்மைப் பொருட்களை வேதியியல் முறையில் பாதுகாப்பது குறித்த பயிற்சி நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.

அருங்காட்சியகத்தில் உள்ள பல்வேறு பொருட் களின் மாதிரிகளை பள்ளி, கல்லூரிகளுக்குக் கொண்டு சென்று, அதுகுறித்து மாணவர் களிடம் விளக்கி, அவர்களை அருங்காட்சியகத்துக்கு வரவழைக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். மேலும், அருங்காட்சியகத்தின் முக்கியத்துவம், பயன்கள் குறித்த குறும்படத்தை திரையிடவும் முடிவு செய்துள்ளோம். தற்போது மாதந்தோறும் ‘கனிமங்கள், சிற்பங்கள், புகைப்படம், வரலாற்று இடங்கள்’ உள்ளிட்ட தலைப்புகளில் கண்காட்சி நடத்திவருகிறோம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்