கச்சத்தீவில் நாளை (வெள்ளிக்கிழமை) புதிய அந்தோனியார் தேவாலயம் திறக்கப்பட உள்ள நிலையில் 4 வெவ்வேறு சிறைப்பிடிப்புகள் மூலம் தமிழக மீனவர்கள் 29 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
பாம்பனிலிருந்து கிறிஸ்டி லியோன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் கிறிஸ்டி லியோன், ரீகன், மலையாண்டி, பாண்டி, சேரிப்பிச்சை ஆகிய ஐந்து மீனவர்களும் தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகில் அஜித், விக்டர், அமரன், வினோத், செந்தில்வேல், லியோன், பேரின்பம் ஆகிய ஏழு பேரும் தலைமன்னார் அருகே புதன்கிழமை அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்ததாக கூறி நாட்டுப்படகையும், விசைப்படகையும் கைப்பற்றி அதிலிருந்து தமிழக மீனவர்கள் 12 பேரையும் கைது செய்து தாழ்வுபாடு கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.
தாழ்வுபாடு கடற்படை முகாமில் மீனவர்களை விசாரணை செய்த பின்னர் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜனவரி 4 வரையிலும் காவலில் அடைக்க உத்திரவிடப்பட்டனர். அதனை தொடர்ந்து 12 மீனவர்களும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
புதன்கிழமை மாலை பாக்ஜலசந்தி கடற்பகுதியில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரத்தைச் சேர்ந்த 2 விசைப்படகும் அதிலிருந்த 13 மீனவர்களும், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணத்தைச் சேர்ந்த விசைப்படகு ஒன்றும் அதிலிருந்த 4 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.
17 மீனவர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வியாழக்கிழமை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.
பாம்பன் மீனவர்கள் வேலை நிறுத்தம்
பாம்பனில் புதன்கிழமை மதியம் மீனவப்பிரநிதி சைமன் தலைமையில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட 5 பாம்பன் மீனவர்களை படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.
கச்சத்தீவில் நாளை (வெள்ளிக்கிழமை) புதிய அந்தோனியார் தேவாலயம் திறக்கப்பட உள்ள நிலையில் மீனவர்கள் 29 பேரை இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதால் தமிழக மீனவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago