டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா நினைவு தினம் - மெரினா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார் இபிஎஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி டிச.5-ம் தேதி அவரது நினைவிடத்தில், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி அஞ்சலி செலுத்துகிறார்.

இதுதொடர்பாக அதிமுக தலைமையகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினமான டிச.5-ம் தேதி காலை 10 மணியளவில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி மலர்கள் தூவி, அஞ்சலி செலுத்துகிறார். தொடர்ந்து, கட்சியின் தலைமை நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.,எம்எல்ஏ-க்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்த உள்ளனர்.

பின்னர், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடவளாகத்தில் உறுதிமொழி மேற்கொள்ள உள்ளனர்.

இந்த நிகழ்ச்சிகளில், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கட்சிப் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று, ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், அனைத்துப் பகுதிகளிலும் ஜெயலலிதாவின் படத்தை வைத்து, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்