தண்டையார்பேட்டையில் மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுந்தர விநாயகர் கோயில் இடித்து அகற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: தண்டையார்பேட்டையில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த விநாயகர் கோயில் நேற்று இடித்து அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு 300-க்கும் அதிகமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.

சென்னை தண்டையார்பேட்டை சுந்தரம் பிள்ளை நகர் பகுதியில் ஸ்ரீசுந்தர விநாயகர் கோயில், கடந்த 20 ஆண்டுகளாக உள்ளது. அப்பகுதி குடியிருப்போர் சங்கத்தில் பல ஆண்டுகளாக செயலாளராக பதவி வகித்து வந்த முத்து என்பவர், கடந்த 2018-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மாநகராட்சிக்கு சொந்தமான 319 சதுர அடி இடத்தை ஆக்கிரமித்து விநாயகர் கோயில் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கோயிலை இடித்து மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை மீட்க கடந்த 2021-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு சரிதான் எனவும் நவ.30-க்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றி உரிய ஆவணத்தை தாக்கல்செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதையடுத்து, மாநகராட்சி மண்டல அதிகாரி மதிவாணன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று காலை கோயிலை இடித்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அசம்பாவிதங்களை தடுக்க அப்பகுதியில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். கோயில் நிர்வாகிகளிடம் போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மக்கள் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்