சென்னை: இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் நவ.17 முதல் 23-ம் தேதி வரையிலான ஒரு வாரத்தில், வழக்கமாக 34 மி.மீ. மழை கிடைக்கும். ஆனால் 3 மி.மீ. மழை மட்டுமே கிடைத்துள்ளது. இது வழக்கத்தை விட 91 சதவீதம் குறைவு. மேலும், கடந்த ஒரு வாரத்தில் 14 மாவட்டங்களில் மழையே பெய்யவில்லை. 22 மாவட்டங்களில் வழக்கத்தைவிட குறைவாக மழை பெய்தது.
கடந்த அக்.1 முதல் நவ. 23-ம் தேதி வரையிலான வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் வழக்கமாக 317 மி.மீ. மழை பெய்யும். இந்த முறை 330 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது வழக்கத்தைவிட 4 சதவீதம் அதிகம்.
கணினி சார்ந்த மாதிரி தகவல்களின்படி, டிச.8 வரையிலான அடுத்த இரு வாரங்களில் வழக்கத்தைவிட குறைவாகவே மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கேரள கடலோரப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 29-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழைபெய்யக்கூடும். சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago