தமிழக காங். தலைவர் பதவியை ஏற்க தயார்: கார்த்தி சிதம்பரம் எம்.பி. தகவல்

By செய்திப்பிரிவு

மதுரை: தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க தனக்கு திறமை, விருப்பம் உள்ளதாக சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

மதுரையில் முன்னாள் பிரதமர்இந்திரா காந்தியின் பிறந்தநாள்விழா நடந்தது. அதில் பங்கேற்றுநலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர், கார்த்தி சிதம்பரம் எம்பி கூறியதாவது: சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடந்த நவம்பர் 15-ல்நடந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது. இதை நடுநிலையாக விசாரித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதை விடுத்து ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுத்தது தவறு எனச் சுட்டிக்காட்டினேன். இதில் அகில இந்திய காங்கிரஸ் தலையிட்டு தீர்வு கண்டுள்ளது.

3 ஆண்டுக்கு ஒருமுறை காங்கிரஸில் தலைவர்களை மாற்றுவது வழக்கமானது. அந்த வகையில் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு எனக்கு விருப்பமும், நாட்டமும், திறமையும் இருக்கிறது என நம்புகிறேன். இந்த பதவியை ஏற்க நான் தயாராக உள்ளேன்.

தமிழக ஆளுநர் வரம்பு மீறிசெயல்படுகிறார். அவரது பின்னணியை பார்த்தால் நாகலாந்தில் நாகாக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது, அதில் தோல்வி அடைந்த காரணத்தால் அதற்கு தண்டனையாக தமிழக ஆளுநராக அனுப்பி வைத்திருக்கின்றனர்.

பிரிவினைவாதிகள் உடனான பேச்சுவார்த்தையில் என்ன குழப்பம் விளைவித்தாரோ, அதே குழப்பத்தை தற்போது தமிழகத்திலும் ஏற்படுத்துகிறார். மத்திய அரசு அவரை திரும்ப பெற வேண்டும். 2024 மக்களவைத் தேர்தலில் அதிக வாக்கு திமுக கூட்டணிக்கே விழும். இந்தி, இந்துத்துவ வாடை அடுத்த தேர்தலில் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

49 mins ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்