சென்னை: கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆவின் சிறப்பு இனிப்புகள் விற்பனை செய்யப்படும் என பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார். இந்தியாவின் ‘வெண்மைப் புரட்சியின் தந்தை’ என்று அழைக்கப்படும் டாக்டர் வர்கீஸ் குரியன் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் நவம்பர் 26-ம் தேதி, தேசிய பால் தினமாக 2014-ம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது.
தேசிய பால் தினத்தையொட்டி, நேற்று சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லம் வளாகத்தில் பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் தேசிய பால் தின கொண்டாட்டம் மற்றும் விற்பனை குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் ஆவின் குறித்த சிறந்த வாக்கியங்கள் உருவாக்கும் போட்டி நடைபெற்றது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த 5 போட்டியாளர்களுக்கு அமைச்சர் நாசர் பரிசும் பாராட்டு சான்றிதழும் வழங்கினார்.
அதேபோல், நீண்ட காலமாக ஆவின் பால் அட்டையை இணையதளம் மூலமாக பெற்று வருகின்ற சிறந்த நுகர்வோர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு பரிசும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
» இரண்டு வாரங்களுக்கு வழக்கத்தைவிட குறைவாக மழை பெய்யும்
» 12 மாவட்ட சிறைகளில் சோதனை அடையாள அணிவகுப்பு அறை கட்டிடம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
அதைத் தொடர்ந்து அமைச்சர் சா.மு.நாசர் பேசியதாவது: பண்டிகை காலங்களில் பொதுமக்கள் விரும்பும் வகையில் பல்வேறு விதமான பால் பொருட்களை ஆவின் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. கடந்த தீபாவளி பண்டிகையின்போது ஆவின் நிறுவனம் பொதுமக்களின் விருப்பத்துக்கேற்ப காஜுகட்லி, காஜு பிஸ்தா ரோல், நெய் பாதுஷா, மோத்திபாக் மற்றும் நட்ஸ் அல்வா போன்ற புதிய இனிப்பு வகைகளை விற்பனை செய்துள்ளது. இந்த இனிப்புகள் பொதுமக்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்று சுமார் ரூ.116 கோடி அளவில் விற்பனை நடைபெற்றது.
அதேபோன்று எதிர்வரும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு சிறப்பு இனிப்புகள் விற்பனை செய்யப்படும். மேலும் வரும் பொங்கல் பண்டிகை காலத்தில் பொதுமக்களுக்கு ஆவினின் 100 மில்லி நெய் பாட்டில்கள் எவ்வித இடர்பாடுமின்றி கிடைக்கும் வகையில் அதன் உற்பத்தியை பெருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலங்களின் பால் விலையுடன் ஒப்பிடும்பொழுது ஆவின் பால் விலை மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே, ஆவின் பால் விற்பனையை அதிகரிக்க வேண்டும். மேலும் எதிர்வரும் கோடை காலங்களில் ஆவின் நிறுவனத்தின் ஐஸ்கிரீம் வகைகள், மில்க் ஷேக் குளிர்பான வகைகள், தயிர் மற்றும் மோர் ஆகியவற்றின் உற்பத்தியை பெருக்கவும், பொது மக்களுக்கு தங்குதடையின்றி வழங்கவும் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இக்கூட்டத்தில் பால்வளத் துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மருத்துவர் ந.சுப்பையன், இணை நிர்வாக இயக்குநர் கே.எம்.சரயு, பொது மேலாளர்கள் மற்றும் ஆவின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு ஆவினின் 100 மில்லிநெய் பாட்டில்கள் எவ்வித இடர்பாடுமின்றி கிடைக்கும் வகையில் நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago