கருணாநிதி, எம்ஜிஆர் நாடகங்களை அரங்கேற்றிய நாடக கொட்டகை மீட்பு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த நூறு வருட பழமையான நாடக கொட்டகையை சென்னை மாநகராட்சி மீட்டுள்ளது.

சென்னையில், வால் டாக்ஸ் சாலையில் அமைந்துள்ள " ஒத்தவாடை நாடக கொட்டகை " பாரம்பரிய நாடக கொட்டகையில் ஒன்றாகும். தியாகராஜ பாகவதர், கே.பி.சுந்தராம்பாள், முன்னாள் முதல்வர் கருணாநிதி, எம்ஜிஆர், சிவாஜி, எம்.ஆர்.ராதா என பலர் தொடக்க காலத்தில் நாடகங்கள் அரங்கேற்றிய இடமாக இது உள்ளது. சிறப்புமிக்க இந்த கொட்டகை பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத காரணத்தால் தனியாரின் ஆக்கிரமிப்பின் கீழ் சென்றது.

இதனைத் தொடர்ந்து இந்த கொட்டகையை மீட்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தது. இதன் பலனாக இந்த கொட்டகையை சென்னை மாநகராட்சி இன்று (நவ.25) மீட்டது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, ஆணையர் ஆகியோர் இந்த கொட்டகையை நேரில் ஆய்வு செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE