உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம்

By ஆர்.டி.சிவசங்கர்

உதகை நகர மத்திய காவல் நிலையமாக (பி1) செயல்பட்டு வந்த பழமையான கட்டிடம், பாரம்பரிய காவல்துறை அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, விரைவில் திறக்கப்பட உள்ளது.

உதகையில் அரசுக் கல்லூரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட பல்வேறு கட்டிடங்கள், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டவை. இக்கட்டிடங்கள் முறையாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

பாரம்பரிய கட்டிடம்

நீலகிரி மாவட்டம் உதகை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது நகர (பி1) காவல் நிலையம், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. கடந்த 1921-ம் ஆண்டு, தென்னிந்தியாவில் மாப்ளா கலவரம் வெடித்தது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தின் எல்லையில் உள்ள கேரள மாநிலம் எரநாடு, வள்ளவநாடு மாவட்டங்களில் கலவரங்கள் தீவிரமாகின.

கலவரக்காரர்கள் ஆங்கிலேய அரசுக் கட்டிடங்கள், கருவூலம் மற்றும் காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது, நீலகிரி காவல் ஆய்வாளர் சி.என்.சேஷகிரிராவ், உதவி ஆய்வாளர் எம்.ஷேக் மொய்தீன் சாயிபு, காவலர்கள் ஈசரண் நாயர் மற்றும் குட்டி கிருஷ்ணன் நாயர் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

கலவரங்களை கட்டுப்படுத்த, ஆங்கிலேயர் அரசு மலபார் சிறப்புக் காவல் படையை ஏற்படுத்தி பயிற்சி அளித்தது. இவர்கள் கலவரங்களை கட்டுப்படுத்தினர்.

கலவரத்தில் பலியான போலீஸாரின் நினைவாக, உதகை பி-1 காவல் நிலையத்தில் நீலகிரி காவல்துறை சார்பில் கல்வெட்டு வைக்கப்பட்டது. இக்கல்வெட்டு இன்றும் உள்ளது.

பழமையாகிவிட்டதால், இக்கட்டிடத்தை இடித்துவிட்டு மாவட்ட காவல்துறை அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. பாரம்பரிய கட்டிடமாக பாதுகாக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். இதனால், கட்டிடத்தை இடிக்கும் முடிவு மாற்றப்பட்டது. உதகை அரசு மருத்துவமனை அருகே மாவட்ட காவல் புதிய அலுவலகம் கட்டப்பட்டது.

இப்பழைய கட்டிடத்தை பாரம்பரிய அருங்காட்சியகமாக மாற்ற காவல்துறை முடிவு செய்து, பணிகளை தொடங்கியது. நீலகிரி மாவட்ட காவல்துறையினர் வரலாறு குறித்த புகைப்படங்கள், பழமையான துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், மாவட்டத்தின் பழமையான புகைப்படங்கள், வன உயிரினப் புகைப்படங்கள், பழங்குடியின மக்களின் கலாச்சாரம், இயற்கை சுற்றுச்சூழல் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. இந்த அருங்காட்சியகம், விரைவில் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா கூறும்போது, “உதகை பி-1 காவல் நிலையம், பழைய கட்டிடத்தில் இருந்து புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. ஆங்கிலேயர் கால பழமையான கட்டிடத்தை பராமரித்து, அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில், அருங்காட்சியகம் திறக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்