பழநி: பழநி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணிக்கு செல் வோரை அடையாளம் காண்பதற்கு சென் சார் பொருத்தப்பட்ட பாதை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் மாதம் ஒரு முறையும், திருவிழா காலங்களில் இரு முறையும் உண்டியல்களை திறந்து காணிக்கைகளை எண்ணுவது வழக்கம். ஒவ்வொரு முறையும் கோயில் இணை ஆணையர் தலைமையில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் மூலமாக உண்டியல் காணிக்கை எண்ணப்படும். அவை அனைத்தும் கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண் காணிக்கப்படுகிறது.
இந்நிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணிக்கு அனுமதித்தவர்களை தவிர மற்றவர்கள் உள்ளே நுழைவதை தடுக்க நேற்று சோதனை அடிப்படையில் சென்சார் பொருத்திய பாதை அறிமுகம் செய்யப்பட்டது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணிக்கு பதிவு செய்தவர்கள் மட்டும் அந்த பாதையில் நின்றபடி, அதில் பொருத்தியுள்ள கேமராவில் தங்கள் முகத்தை காண்பிக்க வேண்டும். அவர் பதிவு செய்தவராக இருந்தால் கதவு தானாக திறக்கும். பதிவு செய்யாதவர் எனில் பதிவு செய்யவில்லை என காண்பி க்கும்.
மீறி உள்ளே நுழைய முயன்றால் அலாரம் ஒலிப்பதுடன், சிவப்பு மற்றும் நீல வண்ணத்தில் ஒளிரும். அந்த பாதை வழியாக ஒருவர் எத்தனை மணிக்கு சென்றார், எத்தனை முறை சென்று வந்தார் போன்ற விவரங்களை எளிதாக தெரிந்து கொள்ள முடியும். இந்த வசதியை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோயில் நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago