சென்னை: அதிமுக ஆட்சியில் காலாவதி தேதி குறிப்பிடப்படாத ரூ.700 கோடி மதிப்பில் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டதாக தமிழக பொதுக் கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தெவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவமனைகளில் பலகோடிக்கும் அதிகமான காலாவதியான மருந்துகளை வாங்கிகுவித்து வைத்துள்ளது மருத்துவமனைகளில் பொதுக் கணக்கு குழுவினர் செய்த ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு அக்.22-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 2 அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்தபோது ரூ.26 லட்சம் மதிப்பிலான காலாவதியான மருந்துகள் பயன்படுத்தப்பட்டதும், இந்த ஆண்டு மார்ச் 30-ம் தேதி மதுரை மருத்துவமனையில் ஆய்வு செய்தபோது ரூ.16 கோடியில் தேவைக்கு அதிகமாக கொள்முதல் செய்யப்பட்டு,அதனால் மருந்துகள் காலாவதியானதும் கண்டுபிடிக்கப்பட்டது.
தஞ்சாவூர், பாபநாசம், கன்னியாகுமரி அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகள், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதிகுறிப்பிடாத சுமார் ரூ.700 கோடிமதிப்புள்ள மருந்துகள் இருப்புவைக்கப்பட்டுள்ளன.இதுகுறித்துகண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கையின்அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago