நீலகிரியில் கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

By செய்திப்பிரிவு

உதகை: நீலகிரி மாவட்டத்தில் இந்தாண்டு பனிப்பொழிவு தொடங்கிய நிலையில், கடும் குளிரால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் மாதத்தில் தொடங்கி ஜனவரி மாதம் வரை கடும் பனிப்பொழிவு இருக்கும். நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதம் தொடங்கிய மழை நவம்பர்வரை நீடித்ததால், பனிக்காலம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தாண்டு பனிப்பொழிவு தற்போது தொடங்கியுள்ளது. நீர்ப்பனிபொழிவால், இரவு நேரங்களில்வெளியே நடமாட முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

உதகையில் நேற்று அரசு தாவரவியல் பூங்காவில் குறைந்தபட்ச வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது. இரவு நேரங்களில் குளிருக்கு இதமாக தீயிட்டு, மக்கள் குளிர் காய்ந்து வருகின்றனர்.

பனிப்பொழிவு தொடங்கியுள்ளதால் விவசாயிகள் தங்களின் பயிர்களை பாதுகாக்க பனி பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பயிர்கள் கருகாமல் இருக்க பகல் நேரங்களில் ‘ஸ்ப்ரிங்கிளர்’ மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட பூங்காக்களில் மலர்ச் செடிகளை பாதுகாக்கும் வகையில் பனி பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊழியர்கள் துரிதப்படுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்