ஆவடி: திருநின்றவூரில் தனியார் பள்ளி தாளாளர் மகன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி, மாணவ- மாணவிகள், பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர்- லட்சுமிபுரம் பகுதியில் தனியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். சமீபத்தில் பள்ளியின் தாளாளர் மகன் வினோத் (38), கவுன்சிலிங் அளிப்பதாகக் கூறி பிளஸ் 2 மாணவிகள் இருவரை தனி அறைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, மாணவிகள் மற்றும் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில். நேற்று இருநூறுக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள், பள்ளி தாளாளர் மகன் வினோத் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பள்ளி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 50-க்கும் மேற்பட்ட பெற்றோரும் வந்து மாணவ-மாணவிகளுடன் முற்றுகையிட்டனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, தகவலறிந்த பட்டாபிராம் மற்றும் ஆவடி காவல் உதவி ஆணையர்கள் சதாசிவம் மற்றும் புருஷோத்தமன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீஸார் சம்பவ இடம் விரைந்து, போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
» ஆளுநருடன் பழனிசாமி சந்திப்பு - சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக புகார்
» இந்துக்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 6 வாரம் அவகாசம்
அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டோர், ‘பள்ளி தாளாளர் மகன் வினோத் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் தொடரும்’ என்றனர். இதையடுத்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், ஆவடி வட்டாட்சியர் வெங்கடேசன் மற்றும் காவல் உதவி ஆணையர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோரை பள்ளி வளாகத்துக்குள் அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். 7 மணி நேரத்துக்கு மேல் நீடித்த இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், வினோத் மீது துரிதமாக நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்தனர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், திருநின்றவூர் போலீஸார், போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ், வினோத் மீது வழக்குப் பதிவு செய்தனர். அதுமட்டுமல்லாமல், பள்ளி தாளாளரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்த வழக்குத் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீஸார், கோவா மாநிலத்துக்கு தப்பியோடியுள்ள வினோத்தை கைது செய்ய, அங்கு விரைந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், பாலியல் தொல்லை புகார் காரணமாக சம்பந்தப்பட்ட பள்ளிக்கு, இன்று (24-ம் தேதி) முதல் 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை அறிவித்துள்ளது பள்ளி நிர்வாகம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago