கறுப்புப் பண பதுக்கலுக்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது என மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் மத்திய வர்த்தம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு இன்று அளித்தப் பேட்டி:
தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து ஜல்லிக்கட்டு நடத்துவதில் மத்திய அரசு ஆர்வமாக உள்ளது. ஆனால் ஜல்லிக்கட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அது தொடர்பாக விவாதிக்க முடியாது.
பணம் பதுக்கலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளில் வருமான வரி அலுவலர்கள் சோதனையில் ஈடுபடுகின்றனர். இதில் பாரபட்சம் காட்டப்படவில்லை.
இந்தியா முழுவதும் ஏ.டி.எம் களில் புதிய நோட்டுகளை நிரப்புவதற்கான தொழில்நுட்பம் முடிந்துள்ளது. ரிசர்வ் வங்கியில் தேவையான அளவு பணம் கையிருப்பு உள்ளதால், அனைத்து ஏடிஎம்களிலும் விரைவில் மக்களுக்கு தேவையான பணம் கிடைக்கச் செய்யப்படும்.
புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மக்களுக்கு கிடைப்பதில் பிரச்சினை இருப்பது என்றால், அந்தப் பணம் வேறு வழியில் வேறு யாருக்கோ செல்வதாகத் தான் அர்த்தம். அதை கண்டுபிடிக்கவும், தடுக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago