குறவன் - குறத்தி ஆட்டம் என்ற பெயரில் ஆபாச நடனங்களை அனுமதிக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

By கி.மகாராஜன்

மதுரை: குறவன்- குறத்தி ஆட்டம் என்ற பெயரில் ஆபாச நடனம் ஆடுவதை அனுமதிக்கக் கூடாது. இது தொடர்பாக சுற்றறிக்கை பிறப்பிப்பது தொடர்பாக டிஜிபி பதிலளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த முத்துமுருகன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: “திருவிழாக்களில் ஆடல், பாடல் என்ற பெயரில் குறவன் - குறத்தி ஆட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த ஆட்டத்தில் முன்பு புராணக் கதைகள், நீதிக் கதைகள், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வுகள் நடத்தப்பட்டன. சமீபகாலமாக குறவன்- குறத்தி ஆட்டத்தில் ஆபாச நடனங்கள், இரட்டை அர்த்த வசனங்கள் அதிகளவில் இடம் பெறுகின்றன.

எனவே, ஆபாசமான முறையில் குறவன் - குறத்தி ஆட்டம் நடத்த தடை விதித்தும், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஆபாச குறவன் - குறத்தி ஆட்டங்களை நீக்கம் செய்யவும் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வு விசாரித்தது. பின்னர் திபதிகள், பல ஆடல், பாடல் குழுவினர் குறவன் - குறத்தி நடனம் எனும் பெயரில் ஆபாச நடனம் ஆடுவதாக தெரிய வருகிறது. அதற்கு அனுமதிக்கக் கூடாது. எந்த சமூகத்தினரும், யாராலும் அவமதிக்கப்படக் கூடாது. எனவே, குறவன்- குறத்தி நடனம் எனும் பெயரில் ஆபாச நடனம் ஆடுவதைத் தடுக்கும் வகையில் சுற்றறிக்கை அனுப்புவது தொடர்பாக டிஜிபி, பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் ஆகியோரிடம் விளக்கம் பெற்று அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாசரணையை டிசம்பர் 1-க்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்