ஆவடி: ஆவடி காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பூந்தமல்லி டிரங்க் சாலையில் போரூர் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 2-ம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணி நடந்து வருகிறது. இதில், தற்போதுள்ள போக்குவரத்து முறையில் பூந்தமல்லி பைபாஸ் சாலை பகுதியில் நேற்று முதல் தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம், வரும் 2023 பிப்ரவரி 11-ம் தேதி வரை, பகல் மற்றும் இரவு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது
இந்த மாற்றத்தின் படி, சென்னை -பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில், பெரும்புதூர் பகுதியிலிருந்து சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் இனி, மெயின் ரோட்டிலேயே அங்கிருந்து 200 மீட்டர் தாண்டிச் சென்று இரு வெளிவட்ட சாலை பாலங்களுக்கு இடையில் உள்ள சாலை வழியாக இடது புறமாகச் செல்ல வேண்டும்.
வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் வண்டலூர் பக்கமிருந்து வரும் வாகனங்களும், இனி வெளிவட்ட சாலையிலேயே நேராக சென்று கோலப்பஞ்சேரி சுங்கச்சாவடிக்கு முன்பு வலதுபுறமாக “யூ” வடிவில் திரும்பி, வெளிவட்ட சாலையிலேயே பூந்தமல்லி பைபாஸ் சாலை பகுதி வரை வந்து, பின்னர் சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையை அடைந்து தாங்கள் சென்று சேர வேண்டிய இடங்களுக்கு சென்றடையலாம்.
ஆகவே, மெட்ரோ ரயில் திட்டப் பணி விரைந்து முடிய பொதுமக்கள் இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு முழு ஒத்துழைப்பு நல்கவேண்டும்.
» ஆன்லைன் ரம்மி தடை சட்டம் | ஒப்புதல் பெற ஆளுநரை சந்திக்க முடிவு - சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தகவல்
» சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழும டைரக்டர் ஜெனரலாக மீனாகுமாரி நியமனம்
மேலும், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தங்களது ஆலோசனைகளை, http:/twitter.com/avadipolice என்ற சமூக வலைதள முகவரியிலும், ஆவடி போக்குவரத்து காவல் துணை ஆணையரின் இணையதள முகவரியான dcpavadi.traffic@gmail.com மற்றும் கட்டுமான பணி அதிகாரியின் இணையதள முகவரியான sundramoorthyn@kecrpg.com ஆகியவற்றிலும், அம்பத்தூர் போக்குவரத்து காவல் உதவி ஆணையரின் கைப்பேசி எண்ணான 9444212244-லும், ஆவடி போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை எண்: 044-26379100-லும் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago