சென்னை: கட்சியின் ஒப்புதல் பெற்றுதான் யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல் அளிக்க வேண்டும் என்று பாஜக நிர்வாகிகளுக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்," நமது கட்சியின் கருத்துகள் மற்றும் சித்தாந்தங்களை பதிவிடுவதற்கும், எதிர்க்கட்சிகளின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டுவதற்கும் சமூக வலைவதளங்கள் பெரிய அளவு பயன்படுகிறது. சமீபகாலமாக தொலைக்காட்சி செய்தி நிறுவனங்களுக்கு இணையாக யூடியூப் சேனல்கள் அதிக அளவு இயங்கி வருகிறது. நமது கருத்துகளை முன்னெடுத்து வைப்பதற்கு யூடியூப் சேனல்களும் பெரிய அளவு பயன்படுகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால் இவ்வாறு யூடியூப் சேனல்களுக்கு பாஜக சார்பில் நேர்காணல் வழங்கி வரும் சிலர், கட்சியின் நிலைப்பாடுகளை தவிர்த்து தங்களின் சொந்த கருத்துகளை முன்னிறுத்தி வருகிறார்கள். கூட்டணிக் கட்சியை பற்றியும், கூட்டணி கட்சியின் தலைவர்கள் பற்றியும் யூடியூப் சேனல்களில் கட்சியினர் சிலர் முன்வைக்கும் விமர்சனங்கள் கட்சியின் நிலைப்பாடாக மாறுவது ஏற்புடையது அல்ல. அந்த காணொலியை காணும் மக்களுக்கு இது பாஜகவின் அதிகாரப்பூர்வ கருத்து மற்றும் நமது கட்சியின் எண்ண ஓட்டம் இது தான் போன்ற தவறான பிம்பத்தை மக்களிடம் எடுத்துச் சென்று விடுகிறது.
கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்களை தவிர்த்து மற்றவர்கள் யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல் வழங்க விருப்பப்பட்டால், அதை கட்சியின் ஊடகப்பிரிவு தலைவரிடம் தெரியப்படுத்த வேண்டும். இனி வரும் காலங்களில் கட்சியின் ஒப்புதல் பெற்றே யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல் அளிக்க வேண்டும். கட்சி கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago