தமிழகத்தில் நிலுவையில் உள்ள ரயில் திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும்: தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் கனிமொழி, அன்புமணி மனு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் நிலுவலையில் உள்ளரயில்வே திட்டங்களை விரைந்துமுடிக்க வலியுறுத்தி தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்கை திமுக எம்பி கனிமொழி மற்றும் பாமக தலைவர் அன்புமணி எம்பி ஆகியோர் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

சென்னை சென்ட்ரல் அருகேஉள்ள தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்கை, தூத்துக்குடி நாடாளுமன்ற திமுக உறுப்பினர் கனிமொழி நேற்று சந்தித்து, தூத்துக்குடி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள 17 ரயில்வே திட்டங்களை விரைந்து முடிக்க கோரிக்கை மனு அளித்தார்.

அந்த மனுவில், திருநெல்வேலி-பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி விரைவு ரயிலை (16791-16792) தூத்துக்குடி வரை நீட்டிப்பது, மும்பை-மதுரைஇடையே இயக்கப்படும் லோக்மானிய திலக் விரைவு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிப்பது, சென்னை - தூத்துக்குடி இடையே(வழி:தஞ்சாவூர்) புதிய ரயிலைஅறிமுகப்படுத்துவது, திருநெல்வேலி - தூத்துக்குடி-திருநெல்வேலி பயணிகள் ரயிலின் பயணநேரத்தை குறைப்பது, திருச்செந்தூர் விரைவு ரயிலை ஆழ்வார்திருநகரியில் நின்று செல்ல கூடுதல் நிறுத்தம் வழங்குவது, காயல்பட்டினம் ரயில்நிலைய நடைமேடையின் நீளத்தை அதிகரிப்பது, நாசரேத் ரயில் நிலையத்தின் 2-வது நடைமேடையை விரிவாக்கம் செய்வது, தூத்துக்குடி-திருநெல்வேலிஇடையே ரயில் சேவையை அதிகரிப்பது உட்பட 17 கோரிக்கைகளை தெரிவித்திருந்தார். இந்தசந்திப்பின்போது, தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நல சங்கநிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

தமிழகத்தில் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்கள் குறித்து ஆர்.என்.சிங்கிடம் கோரிக்கை
மனு அளித்த பாமக தலைவர் அன்புமணி எம்பி. உடன் முன்னாள் மத்திய இணை அமைச்சர்
ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர்.

இதேபோல் பாமக தலைவர் அன்புமணி எம்பி நேற்று தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்கை சந்தித்து தமிழகத்தில் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்கள் குறித்து கோரிக்கை மனு அளித்தார். முன்னாள் மத்திய ரயில்வே இணையமைச்சர் ஏ.கே.மூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். பின்னர், அன்புமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் நிலுவையில் உள்ள தருமபுரி மொரப்பூர் ரயில்வே திட்டம், திண்டிவனம் நகரி ரயில்வே இணைப்பு திட்டம், திண்டிவனம் - திருவண்ணாமலை - அத்திப்பட்டு - புத்தூர் - சென்னை - மாமல்லபுரம் - பாண்டிச்சேரி - கடலூர் ரயில் இணைப்பு திட்டம், ஈரோடு-பழனி ரயில் இணைப்பு திட்டம், மதுரை - தூத்துக்குடி ரயில் இணைப்பு திட்டம் குறித்து கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் விவாதித்தோம்.

நடப்பு நிதி ஆண்டில் போதுமான அளவுக்கு தமிழகத்துக்கு நிதி வந்திருக்கிறது என ரயில்வேமேலாளர் ஆர்.என்.சிங் உறுதிஅளித்திருக்கிறார். அடுத்த கட்டமாக மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து, தமிழகத்தில் நிலுவையில் உள்ள மற்ற திட்டங்கள் குறித்தும் நிச்சயமாக ஆலோசனை செய்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்