சென்னை: சென்னை மெரினா கடற்கரையைத் தொடர்ந்து பெசன்ட் நகர் கடற்கரையிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதை அமைக்க கடற்கரை கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையத்திடம் சென்னை மாநகராட்சி அனுமதி பெற்றுள்ளது.
சென்னையில் உள் கடற்கரைகளை அனைவருக்கும் ஏற்ற வகையிலாக மாற்றும் வகையில் மாற்றுத்திறனாளிகள் மனல் பரப்பில் சென்று கடலை ரசிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பாதை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதன்படி கடற்கரையின் மணல் பரப்பில் வீல் சேருடன் சென்று கடல் அலையில் விளையாடும் வகையில் மெரினா கடற்கரையில் சிறப்பு பாதையை அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது.
இதன்படி மெரினா கடற்கரையில் நம்ம சென்னை செல்பி பாயிண்ட் அருகே 380 மீ நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் இந்தப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கான்கிரீட் அல்லாத மரப்பலகையால் ரூ.1 கோடி செலவில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இதுபோன்று பெசன்ட் நகர் கடற்கரையிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான நடை பாதை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதற்கு அனுமதி அளிக்க கோரி தமிழ்நாடு மாநில கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையத்திடம் சென்னை மாநகராட்சி விண்ணப்பித்தது. இந்நிலையில் இதற்கு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago