கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க: பூசாரிகள் பேரவை மாநாட்டில் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

நாமக்கல்: கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என அகில இந்திய கிராம கோயில் பூசாரிகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.

இப்பேரவையின் மாவட்ட மாநாடு நாமக்கல்லில் நடைபெற்றது. மாநாட்டுக்கு, மாநிலத் தலைவர் மத் கிருஷ்ணபிரேமை சுவாமி தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் கே.குமரேசன் வரவேற்றார். சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் தலைமை அர்ச்சகர் எஸ்.எஸ்.சிவக்குமார் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், ‘நலிவடைந்த பூசாரிகள் அனைவருக்கும் மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும். 60 வயதான பூசாரிகளுக்கு அரசு அறிவித்த ஓய்வூதியத் தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். பூஜை செய்யும் கோயிலுக்கு அருகிலேயே பூசாரிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்.

அனைத்துப் பூசாரிகளையும் நலவாரிய உறுப்பினராகப் பதிவு செய்ய வேண்டும். அனைத்துக் கோயில்களுக்கும் நிபந்தனையற்ற இலவச மின்சாரம் வழங்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில், சேலம் மாவட்ட அமைப்பாளர் எஸ்.வேல்மணி, நாமக்கல் மாவட்ட இணை அமைப்பாளர்கள் பி.பெரியசாமி, ஆர்.மதுரைவீரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்