விருத்தாசலம்: பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் நலன் கருதி விலையில்லா சைக்கிளை அரசு வழங்கி வரும் நிலையில், மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணம் செய்யும் அவல நிலை தொடர்வதாக ஆசிரியர்களும், பேருந்து ஓட்டுநர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கல்வியை தொடரும் வகையில் பல்வேறு வகைகளில் அரசு அவர்களுக்கு உதவி வருகிறது. அவற்றில், பேருந்துப் பயண அட்டை,11-ம் வகுப்பில் மிதிவண்டி உள்ளிட்டவையும் அடங்கும். இவற்றை வழங்கிய பிறகும், மாணவர்கள் பேருந்தில் ஆபத்தான வகையில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் நிலை தமிழகம் முழுவதும் தொடர்கிறது. இதனால் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் கடும் நெருக்கடியை சந்திக்கின்றனர்.
படிக்கட்டில் தொங்கிவரும் மாணவர்கள் பெரும்பாலும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களாகவே இருப்பதால், அவர்களை ஓட்டுநர், நடத்துநர் கண்டித்தாலும் அதை ஏற்க மறுத்து, அவர்களை தாக்க முற்படுகின்றனர். அவர்களும், ‘நமக்கேன் வம்பு’ என்கிற வகையில் ஒதுங்கிக் கொள்கின்றனர். மாணவர்களின் படிக்கட்டு பயணம் பொதுமக்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தினாலும், விபத்து ஏற்பட்டால் அவர்கள் முதலில் குறைகூறுவது போக்குவரத்துக் கழகத்தைத் தான் என்கிறார் விழுப்புரம் அரசுப்போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்து ஓட்டுநர் தியாகராஜன்.
இதுதொடர்பாக சில பள்ளித் தலைமையாசிரியர்களிடம் பேசியபோது, “பேருந்துகளில் வருவோரில் 95 சதவீத மாணவர்கள் ஐந்தாறு கி.மீ சுற்றளவிற்குள் உள்ள பகுதிகளில் இருந்துதான் பள்ளிக்கு வருகின்றனர். அவர்கள் தாராளமாக சைக்கிள்களில் வந்து செல்லலாம். கிராமப்புற மாணவர்கள் மேல்நிலைக் கல்வியை தொடரும் வகையில்தான் விலையில்லா சைக்கிள் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. அவ்வாறு மாணவர்களுக்கு வழங்கப்படும் சைக்கிள்களை குடும்பத்தில் உள்ளவர்கள் வேலைக்குச் சென்று வர பயன்படுத்துகின்ற நிலை உள்ளது. அதனால் மாணவர்கள் சிலர் பேருந்தில் பயணிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
» கால்பந்து வீராங்கனை இறந்த விவகாரத்தில் தலைமறைவு - அரசு மருத்துவர்களை தீவிரமாக தேடும் தனிப்படை
ஒருசில பள்ளிகளில் சைக்கிள் பெற்ற மாணவர்களுக்கு பேருந்து பயண அட்டையை நிறுத்தியபோது, பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், வேறு வழியின்றி பயண அட்டையை வழங்கினோம். பேருந்துகளில் மாணவர்களின் ஒழுங்கீனமான செயல்கள் குறித்த தகவல் எங்களையும் வந்தடைகிறது. பள்ளி வளாகம் வரைதான் எங்களாலும் கட்டுப்படுத்த முடிகிறது” என்கின்றனர்.
இதுகுறித்து எடுத்தவாய்நத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பொன்னுசாமி கூறுகையில், “பேருந்தில் பயணிக்கும் மாணவர்களால் அன்றாடம் பிரச்சினைகள் எழுவது உண்மைதான். அரசு சைக்கிள் பெற்ற மாணவர்களுக்கு, பேருந்து பயண அட்டை வழங்குவதை நிறுத்தினால், இப்பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு காணலாம். அரசு இதுகுறித்து பரிசீலிக்க வேண்டும்” என்றார்.
இது குறித்து விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஜோசப் டயஸிடம் கேட்டபோது, “இதில், அரசு தான் முடிவெடுக்க வேண்டும். இது தொடர்பாக போக்குவரத்து துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரிடம் எங்கள் கருத்துகளை முன்வைக்க உள்ளோம்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago