விளிம்பு நிலைப் பணியாளர்களுக்கு, வருங்கால வைப்பு நிதி அலுவலகம் மூலமாக ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதற்கான வாழ்வு சான்றிதழ் வழங்க முடியாமல் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளனர்.
தனியார் கடைகள், வணிக நிறுவனங்கள், பீடி சுற்றும் தொழி லாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு, அவர்களது ஓய்வு காலத்தில் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் மூலம் அதிகபட்சமாக ரூ. 2,000 ஓய்வூதியம் வழங்கப் படுகிறது. பொதுவாக ஓய்வூதியம் பெறுபவர் கள் ஆண்டுக்கு ஒரு முறை அவர்கள் உயிருடன் இருப்பதற்கான வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க வேண் டும். இதனை அந்தந்தப் பகுதியில் உள்ள வங்கிகளில் சமர்ப்பித்து வந்த னர். நடப்பு ஆண்டு முதல் அதை வருங்கால வைப்புநிதி அலுவலகத் துக்கு நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதனால், ஓய்வூதியம் பெறும் ஏழை வயோதிகர்கள் ஆட்டோ பிடித்து வந்து, தங்கள் மாத ஓய்வூதியத்தில் பாதியை செலவு செய்யும் நிலை எழுந்துள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட தோட்டத் தொழிலாளர் சங்க பொது செயலாளர் வல்சகுமார் கூறும்போது,
``ரப்பர் தொழிலாளர்கள், முந்திரி தொழிலாளர்கள், பீடி சுற்றும் தொழிலாளர்கள் ஆயிரக் கணக்கானோர் வங்கி மூலம் பி.எப். ஓய்வூதியம் பெறுகின்ற னர். பெரும்பாலும் ஏழைகளான இவர்கள், மாவட்ட தலைமையிடத் தில் உள்ள பி.எப், அலுவலகத்துக்கு சென்று, விண்ணப்பித்து திரும்புவது என்பது பொருளாதார சிக்கலை ஏற்படுத்தும். அதிலும், வயோதிகர்கள், இயலாத நிலை யில் உள்ளவர்களால், ஆட்டோ பிடித்து, இங்கு வந்து செல்வது கூடுதல் பணச் செலவையும், உடல் நலக்குறைவையும் ஏற்படுத்தும். எனவே, அந்தந்த வங்கிகளின் மூலம் வாழ்வு சான்று பெறப்பட வேண்டும். அல்லது அதற்கு பதிலாக பி.எப் அலுவலகங்கள் ஒன்றிய வாரியாக தேதி அறிவித்து முகாம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago