ஒட்டன்சத்திரம்: வரத்து தொடர்ந்து அதிகரிப்பால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்து ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.14-க்கு விற்பனையாகிறது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், பழநி, வடமதுரை, அய்யலூர், சாணார்பட்டி, கோபால்பட்டி பகுதிகளில் அதிக அளவில் தக்காளி பயிரிடப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட தக்காளி பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராகியுள்ளன. இதனால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு கடந்த சில தினங்களாக வரத்து அதிகரித்து வருகிறது. இங்கிருந்து வெளி மாவட்டங்கள், கேரளாவிற்கும் அதிகளவில் விற்பனைக்கு செல்கிறது. இருப்பினும் கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.30 வரை விற்ற நிலையில் தற்போது விலை வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.14 வரை விற்பனையாகிறது. விலை குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம் விவசாயிகள் கூறுகையில், ''முதல் ரக தக்காளி ஒரு கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.7 வரைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். வியாபாரிகள் போக்குவரத்து செலவு உள்ளிட்வைகளை சேர்ந்து மார்க்கெட்டில் ஒரு பெட்டி (14 கிலோ) ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனை செய்கின்றனர்'', என்றனர்.
ஒட்டன்சத்திரம் வியாபாரிகள் கூறுகையில், ''ஒரு பெட்டி (14 கிலோ) ரூ.300 முதல் ரூ.450 வரைக்கு விற்பனையானால் தான் கட்டுப்படியாகும். தொடர்ந்து வரத்து அதிகரிப்பால் விலை சரிந்துள்ளது. மேலும் வரத்து அதிகரித்தால் இன்னும் விலை குறைய வாய்ப்புள்ளது'', என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago