சென்னை: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி வீ.பாரதிதாசனை தமிழக அரசு நியமித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக பணியாற்றிய ஓய்வுபெற்ற நீதிபதி எம்.தணிகாசலம் மற்றும் உறுப்பினர்கள், தங்களது பதவி விலகல் கடிதங்களை அரசுக்கு சமர்ப்பித்துள்ளனர். அவர்களது பதவி விலகல் ஏற்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வீ.பாரதிதாசன் நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளான ச.கருத்தையா பாண்டியன், மு.ஜெயராமன், இரா.சுடலைக்கண்ணன், கே.மேக்ராஜ், தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் பெரு.மதியழகன் மற்றும் திருப்பூர் மாவட்டம் கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரி முதல்வர் எஸ்.பி.சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago