வேலூர் மாவட்டம் மேல்பாடியில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்களில் இருந்து பல நூறு கோடி மதிப்பிலான 114 சிலைகள் கடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
புதுச்சேரி கோலாஸ் தெருவில் உள்ள வீட்டில் தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கடந்த மாதம் 26-ம் தேதி திடீர் சோதனை நடத்தினர். அங்கு, வேலூர் மாவட்டம் மேல்பாடியைச் சேர்ந்த அரிஞ்சிகை ஈஸ்வரர் மற்றும் சோமநாதீஸ்வரர் கோயில்களுக்குச் சொந்தமான 11 சிலைகளை போலீ ஸார் மீட்டனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.50 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ள இந்த 2 கோயில்களில் இருந்து 11 சிலைகள் எப்போது கடத்தப்பட்டன என்ற விவரம் தெரியாமல் அதி காரிகள் திணறுகின்றனர்.
இது தொடர்பாக ஊர் பெரியவர் கள் கூறும்போது, ‘‘மேல்பாடி அருகே உள்ள நீவா ஆற்றங் கரையில் நடந்த போரில் ராஜராஜ சோழனின் பாட்டனார் அரிஞ்சய சோழர் உயிர் துறந்தார். அந்த இடத் துக்கு அருகில் முதலாம் பராந்தக சோழன் ஆட்சிக்காலத்தில் கட் டப்பட்ட சோமநாதீஸ்வரர் கோயில் இருந்தது.
பிற்காலத்தில் ராஜராஜன் ஆட்சிக்கு வந்ததும் தமது பாட்டனார் அரிஞ்சய சோழர் உயிர் துறந்த இடத்தில் பள்ளிப்படை கோயிலை எழுப்பினார். அதற்கு அருகில் இருந்த சோமநாதீஸ்வரர் கோயிலுக்கு கலையழகுடன் கூடிய மண்டபம், திருச்சுற்று மாளி கையை கட்டினார். சோமநாதீஸ்வரர் கோயிலுக்கு 15 கழிஞ்சு தங்கமும் 1,000 குழி நிலமும் ராஜராஜன் தானமாக வழங்கியதாகக் கூறப் படும் கல்வெட்டு உள்ளது. அதில் கூறப்பட்டுள்ள அடிப்படையில், 80 கிராம் தங்கம் மற்றும் ஒரு லட்சம் சதுர அடி நிலம் தானமாக வழங்கப்பட்டதாக தெரிகிறது.
பாட்டனார் மீதான பெருமதிப் பால் இந்த 2 கோயில்களுக்கும் ராஜராஜன் பொன்னையும் நிலத்தை யும் தானமாக அள்ளிக் கொடுத் தார். அவருக்குப் பின் வந்த சோழ ஆட்சியாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் தங்க நகைகளை யும் சிலைகளையும் தானமாகக் கொடுத்தனர்.
மாலிக்காபூர் படையெடுப்பில் இந்த கோயில் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. சிதிலமடைந்து மண் மூடிக் கிடந்த கோயிலை தொல்லியல் துறை அதிகாரிகள் புனரமைத்தனர். பின்னர், இந்து சமய அறநிலையத் துறை அதி காரிகளின் கட்டுப்பாட்டில் வந்தது.
இங்கிருந்து, 1965-ம் ஆண்டில் இருந்து 1975-ம் ஆண்டுக்குள் 114 சிலைகள் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் மதிப்பு பல நூறு கோடி ரூபாய் இருக்கும் என்று போலீஸார் விசாரித்த பிறகே எங்களுக்கு தெரியவந்தது. கோயிலை சூறையாடிவிட்டார்கள் என்றே கூறலாம். இங்கு கொள் ளையடிக்கப்பட்ட பெரும்பாலான சிலைகள் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகங்களில் இருப்ப தாக கேள்விப்பட்டோம். அவற்றை தமிழக அரசு மீட்க முயற்சி எடுக்க வேண்டும்” என்றனர்.
இது தொடர்பாக, தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேலிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘மேல்பாடி யில் உள்ள கோயில்களில் இருந்து 1965-ம் ஆண்டில் இருந்தே ஒவ் வொன்றாக கடத்தி இருக்கிறார்கள். பலரிடம் கை மாறி கடைசியாக பிரெஞ்சு தம்பதி வன்னிலா, விஜய் பிரபாகரனிடம் வந்துள்ளது. அவர் களை விசாரணைக்கு வருமாறு அழைக்க உள்ளோம். பிரான்ஸ் நாட்டில் உள்ள அவர்கள் விசார ணைக்கு வராவிட்டால் வெளியுற வுத் துறை அமைச்சகம் மூலம் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. மீட்கப்பட்ட 11 சிலை களில் 9 சிலைகள் நல்ல நிலையில் உள்ளன. இந்த சிலை கள் யார் மூலம் இவர்களுக்கு கிடைத் தது என்பது குறித்து விசாரிக் கப்படும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago