சென்னை: ஆளுநர்கள் ‘ரப்பர் ஸ்டாம்ப்’ அல்ல என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று (நவ.15) நடைபெற்ற லோக் ஆயுக்தா தின விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பேசுகையில், "ஆளுநர் பதவி அமைப்பு முறை முக்கியமானது. லோக் ஆயுக்தா போன்ற அமைப்பு முறைகளை வலுவிக்கச் செய்யும் வகையில் சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்படும்போது, பங்காற்றுவதற்கு ஆளுநர்களுக்கு பொறுப்பு உள்ளது. ஆளுநர்கள் அதில் முடிவெடிடுக்க வேண்டும். ஏனென்றால் ஆளுநர்கள் ரப்பர் ஸ்டாம்கள் அல்ல.
ஆளுநர் என்ன செய்ய வேண்டும். என்ன செய்யக் கூடாது என்று அனைத்து வகையாக குரல்களும் ஒலிக்கப்படுகின்றன. அந்த ஒலிகள் முக்கியமல்ல. முக்கிமானது எதுவென்றால், அது இந்திய அரசியல் அமைப்பு சட்டம். உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் அரசியல் அமைப்பை வெளிப்படுத்தும் அமைப்புகள், ஆளுநரின் நடவடிக்கை சரியானதா, இல்லையா என்பதை நீதித்துறை முடிவு செய்யும்.
அரசியல் அமைப்பு விதி 200-ன் கீழ் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததாகவோ அல்லது மசோதவை தடுத்து நிறுத்துவதாகவோ அல்லது குடியரசு தலைவரின் பரிசீலனைக்காக வைத்திருப்பதாகவோ ஆளுநர் அறிவிக்கலாம். அது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது" என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago