செனனை: வரும் ஜனவரி 9-ல் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் போட்டியிடவுள்ள வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற வளாகத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மிகவும் பழமையான சங்கங்களில் ஒன்றாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளது. 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தச் சங்கத்தில் சுமார் 17,000 வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர் . இந்தச் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.
கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தலைவராக மோகனகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு அடுத்த தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சத்தியபால் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தலுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், தேர்தலில் போட்டியிடுவதற்கு புதிய தகுதிகளையும் அறிவித்தது. அதன்படி 5 ஆண்டுகளில் 200 வழக்குகள் நடத்தியவர்கள்தான் தேர்தலில் போட்டியிட தகுதியானவர்கள் என்பது உள்ளிட்ட விதிகளை உருவாக்கி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு, தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டனர். மேலும், ஏற்கெனவே இருந்த சங்கங்களின் சட்ட விதிகள் படியே தேர்தலை நடத்தலாம் என்று உத்தரவிட்டனர்.
இதையடுத்து, தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர். மேலும், வரும் ஜனவரி 9-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இச்சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், நூலகர் மற்றும் 6 மூத்த செயற்குழு உறுப்பினர்கள், 5 இளைய செயற்குழு உறுப்பினர்களை தேர்வு செய்யும் இத் தேர்தலுக்கான பிரச்சாரம் உயர் நீதிமன்றத்தில் தீவிரமடைந்துள்ளது.
தலைவர் பதவிக்கு, சங்கத்தின் தற்போதைய தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், முன்னாள் தலைவரும் தற்போதைய பார் கவுன்சில் உறுப்பினருமான ஆர்.சி.பால் கனகராஜ், முன்னாள் செயலாளரும் தற்போதைய பார் கவுன்சில் உறுப்பினருமான எம்.வேல்முருகன், சத்தியபால் ஆகியோர் போட்டியிடுகின்றனர். துணைத் தலைவர் பதவிக்கு அப்துல் ரஹ்மான், அறிவழகன், முரளி கோபால் உள்ளிட்டோரும், செயலாளர் பதவிக்கு கிருஷ்ணகுமார், காமராஜ் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு ராஜேஷ், ஆனந்த், தாரா, கே.கே.சிவகுமாரும் போட்டியிடுகின்றனர். நூலகர் பதவிக்கு விஜயராஜ், ரகு, இளையராஜா, பழனி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
இத்தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பின்போது, இலவசப் பொருட்கள் வழங்குதல், துண்டு பிரசுரங்கள் விநியோகிக்க தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்தலில் போட்டியிடும் வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களை நேரில் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago