உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்தவர் பழங்குடியினத்தவர் அல்ல: அரசின் விளக்கத்தையேற்று வழக்கு முடித்துவைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட நபர் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல என தமிழக அரசு தரப்பில் விளக்கம்அளிக்கப்பட்டதை அடுத்து, இந்த வழக்கை முடித்து வைத்துஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தும் அதை வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழித்ததாக குற்றம் சாட்டி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் படப்பையைச் சேர்ந்த நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் கடந்த மாதம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாகமுன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது. இந்நிலையில் இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, பட்டியலினத்தைச் சேர்ந்த வேல்முருகன் பழங்குடியினருக்கான சாதிச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்துள்ளார்.

அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டதில் அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்ததால், அவருடைய விண்ணப்பத்தை நிராகரித்து உத்தரவிட்டுள்ளனர் என விளக்கமளித்தார். அதையடுத்து நீதிபதிகள், நீதிமன்ற வளாகத்துக்குள் இந்த தற்கொலை சம்பவம் நடந்ததால் நீதிமன்றம் தனது கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது. ஆகவேதான் தாமாக முன்வந்து வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. தீக்குளித்து இறந்த வேல்முருகனும், அவரது தந்தையும்பட்டியல் இனத்தைச் சேர்ந்த குறவர் என்பதால், அவரது மகனுக்கு பழங்குடியினருக்கான சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பிக்க முடியாது எனக்கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்