பழநி அருகே போலீஸ் பாதுகாப்புடன் பட்டியலின மக்கள் கோயிலுக்குள் வழிபாடு

By செய்திப்பிரிவு

பழநி: பழநி அருகே சித்தரேவில் உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் பட்டியலின மக்கள் கோயிலுக்குள் சென்று வழிபட்டனர்.

பழநி அருகேயுள்ள சித்தரேவு கிராமத்தில் உச்சிகாளியம்மன், செல்வ விநாயகர் கோயில்கள் அமைந்துள்ளன. இந்த கோயிலுக்குள் சில ஆண்டுகளாக பட்டியலினத்தவரை அனுமதிக் காமல் குறிப்பிட்ட பிரிவினர் தீண்டாமையை கடைப்பிடித்தனர். பட்டியல் இனத்தவரை கோயிலுக்குள் அனுமதிக்கக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடந்தன. இப்பிரச்சினை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லை.

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர், பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பது சட்ட விரோதம். அவர்களை கோயிலுக்குள் அனுமதிக்கவும், தீண்டா மையை கடைப்பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பட்டியலின மக்கள் கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதி அளித்தது. இதையடுத்து பட்டியலின மக்கள் நேற்று கோயிலுக்கு வழிபடச் சென்றனர். அப்போது குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த பெண்கள் பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்து, கோயில் வாசல் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். இதன் பின் பழநி வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், வட்டாட்சியர் சசி, ஏடிஎஸ்பி சந்திரன், டிஎஸ்பி சிவசக்தி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உயர் நீதிமன்ற உத்தரவு குறித்து ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்தனர். பின்னர் பட்டியலின மக்கள் போலீஸ் பாதுகாப்புடன் உச்சிகாளியம்மன், செல்வ விநாயகர் கோயிலுக்குள் சென்று கண்ணீர மல்க வழிபட்டனர்.

பெண்கள் எடுத்து வந்த தீர்த்தக்குடத்தில் இருந்த புனித நீர் மூலம் அம்மனுக்கும், விநாயகருக்கும் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். அங்கு வந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் கோயில் உள்ள பகுதியை பார்வையிட்டு, அனைத்து மக்களும் கோயிலுக்குள் சென்று வழிபட்டு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்