சென்னை: சென்னை புறநகரில் முகலிவாக்கம் பகுதியில் மழைநீர் தேங்கிய பகுதிகளை எதிர்க்கட்சித் தலைவர்கே.பழனிசாமி பார்வையிட்டதுடன், திமுக அரசின் பணிகள் குறித்து விமர்சித்தார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் தா.மோ.அன்பசரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆலந்தூர் தொகுதிக்கு உட்பட்ட கொளப்பாக்கம் கணேஷ் நகர், முகலிவாக்கம் திருவள்ளுவர் நகர், ஆறுமுகம் நகர் பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதற்கு மழை பெய்தது காரணமல்ல; முன்னாள் முதல்வர் பழனிசாமிதான் காரணம். போரூர் ஏரிக்கு மாங்காடு, பூந்தமல்லி, காட்டுப்பாக்கம் தண்ணீர்தான் வரும். மதுரவாயல் புறவழிச்சாலை அமைக்கப்பட்டதால் தண்ணீர் வெளியேற வழியில்லை. ஐயப்பன்தாங்கல், பரணிபுத்தூர் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகத் தண்ணீர் தேங்கியிருந்தது. 7 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இதற்குநிரந்தர தீர்வு காண ரூ.120 கோடிஒதுக்கப்பட்டு, மதுரவாயல் புறவழிச்சாலையின் கீழே வாய்க்கால் பாலம்அமைக்கப்பட்டுள்ளது. அதன்பின், 400 கன அடி தண்ணீர் வெளியேறியுள்ளது. மணப்பாக்கம் கால்வாய்ஓர் இடத்தில் 7 அடி ஆழமும் மற்றொரு இடத்தில் 10 அடி ஆழமும்உள்ளது. இதனால் திருவள்ளுவர் நகர், கணேஷ் நகரில் தண்ணீர் வந்தது. கடந்த ஆண்டும் இதே நிலைதான்.
பாதிக்கப்பட்ட பகுதியை யாரும் வந்து பார்க்கவில்லை என்று கூறியிருக்கிறார். 4 நாட்களாக நான்அங்குதான் இருந்தேன். தண்ணீரை வெளியேற்ற மதனந்தபுரத்தில் இருந்து 3,000 மீட்டருக்கு புதிய கால்வாய் அமைக்கிறோம். 1,600 மீட்டர் கால்வாய் பணிகள் முடிந்துவிட்டன. மழையால் பணிகளை நிறுத்தி வைத்துள்ளோம். மழை விட்டதும் பணிகள் தொடங்கப்படும். கால்வாய் அமைத்துவிட்டால், போரூர் ஏரியிலிருந்து எவ்வளவு தண்ணீர் வந்தாலும், ராமாபுரம் கால்வாய் வழியாக வெளியேறிவிடும். இவ்வளவு பணிகளை நாங்கள் செய்து வரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றும் செய்யாத பழனிசாமி குறை சொல்வதில் நியாயம்இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த இவர்கள், தண்ணீர் நிற்காமல் செய்திருக்கலாமே. நாங்கள் ஒன்றரை ஆண்டுகளில் இவ்வளவுபணிகளைச் செய்து வருகிறோம். பழனிசாமி அரசியல் செய்வதற்காக இங்கு வந்துள்ளார். ஆலந்தூர் கண்ணன் காலனி, மாதவபுரம், நங்கநல்லூர், பழவந்தாங்கலிலும் தண்ணீர் நிற்காமல் சீரமைக்கப்பட்டுள்ளது. தற்போது மழைநீர் தேங்கிய பகுதிகளில் மழை விட்டுள்ளதால், நீரை அகற்றும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. ஓராண்டில் ஆலந்தூர் பகுதியைச் சீரமைத்துவிட்டோம். அடுத்த ஆண்டில் அப்பகுதியில் தண்ணீர் நிற்காது. என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago